sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?

/

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?

தமிழக ரயில் திட்டங்களுக்கு நிதி எவ்வளவு?

7


UPDATED : ஜூலை 28, 2024 12:26 PM

ADDED : ஜூலை 28, 2024 12:19 PM

Google News

UPDATED : ஜூலை 28, 2024 12:26 PM ADDED : ஜூலை 28, 2024 12:19 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்திற்குள் நடக்கும் ரயில்வே திட்டங்களில், பல பணிகளுக்கு முந்தைய ஆண்டுகளை காட்டிலும், தற்போதைய ரயில்வே பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்த விவரம் பின் வருமாறு:

திண்டிவனம் - திருவண்ணாமலை


திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கி.மீ., தூரத்துக்கு ரயில் வழித்தடம் அமைக்க 2006ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2008 ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 3 ஆண்டுகளில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.900 கோடிImage 1299982

அத்திப்பட்டு - புத்தூர் திட்டம்


வேலூர் மாவட்டம் அத்திப்பட்டுவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்தூருக்கு 88.30 கி.மீ.,தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2008 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து ஆந்திர, கர்நாடகா மாநிலங்களுக்கான சரக்கு போக்குவரத்துக்கு என முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டது. நிலத்தில் கையகபடுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இத்திட்டத்திற்கு ஆர்வம் காட்டப்படவில்லை. தற்போது வரை ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லைImage 1299983

திண்டிவனம் - நகரி வழித்தடம்


திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் திருப்பதி வழியாக நகரிக்கு செல்லும் வகையில் 180 கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில் திட்டம் 2006- 07 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2007 ல் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பு ரூ.582 கோடி எனகணிக்கப்பட்டது. இத்திட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை.Image 1299984

ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி ரயில் பாதை


ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில்பாதை 2012-13 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதுImage 1299985

மொரப்பூர் - தர்மபுரி


மொரப்பூரில் இருந்து தர்மபுரி வரை பழைய மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக்கக 2016 - 17 ம் ஆண்டு பட்ஜெட்டில் அிறவிக்கப்பட்டது. மொத்தம் 36 கி.மீ., தூரத்திற்காக இப்பணியின் மொத்த மதிப்பீடு ரூ.360 கோடி

Image 1299986

சென்னை - கடலூர்


சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுகம் வரை ரூ.323.52 கோடி மதிப்பில் புதிய ரயில்பாதை அமைக்க 2008-09 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 128.28 கி.மீ., தூரம் கொண்டு இத்திட்டம் தமிழகத்தையும், புதுச்சேரியையும் இணகை்கும் வகையில் இருந்தது

Image 1299987

ஈரோடு - பழனி வழித்தடம்


ஈரோட்டில் இருந்து சென்னிமலை, தாராபுரம், காங்கேயம் வழியாக பழநிக்கு 91.05 கி.மீ.,தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க 2008 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திட்ட மதிப்பு ரூ.1,140 கோடி. தேவையான நதியில் பாதியை தமிழக அரசு வழங்க வேண்டும். தேவையான நிலத்தை தமிழக அரசு இலவசமாக ரயில்வே துறைக்கு வழங்கினால் மட்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு நிலம் வழங்க தயாராக இல்லாததால் திட்டம் முடங்கி உள்ளது.Image 1299988

மதுரை -தூத்துக்குடி


மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.2,053 கோடியில் 143.5 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க2011 ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 18 கி.மீ., தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதுவரை ரூ.350 கோடி செலவாகி உள்ளது.Image 1299989

காரைக்கால் துறைமுகம் ரயில் பாதை


காரைக்காலில் இருந்து திருநள்ளாரு வழியாக பேரளத்துக்கு இருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனை மீண்டும் புதிய அகல ரயில் பாதையாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us