ADDED : செப் 16, 2026 05:27 AM

'ஏஐ' தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தாத தொழிலே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சலுான் ஒன்றில் முடிவெட்டும் தொழிலாளி ஒருவர், தலையிலும், உடலிலும் கேமராக்கள், ஒலிப்பதிவு கருவிகளை கட்டிக்கொண்டு முடி வெட்டும் வீடியோ அதை உறுதி செய்திருக்கிறது.
ஏஐ மென்பொருளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, சலுான் தொழிலாளி, தான் செய்யும் வேலை முழு வதையும் அப்படியே வீடியோவில் பதிவு செய்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, 'எதிர்காலத்தில் சலுான் தொழிலாளர்களுக்கும் 'ஏஐ'யால் வேலை இழப்பு ஏற்படும் போலிருக்கிறது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சந்திர மண்டலம் செல்லும் விண்வெளி வீரர் போல, உடல் முழுதும் நவீன கருவிகளை மாட்டிக்கொண்டு முடி வெட்டும் அந்த சலுான் தொழிலாளியின் வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சொன்னது நடக்கவில்லை; செய்தே முடித்தார் நல்லவர்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொழில் நிறுவனம் நடத்தும் சித்தார்த் தைலானி, கோரமங்களா நடைபாதை பழுது பற்றி மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தும் வேலை நடக்கவில்லை. பொறுமை இழந்த அவர், பாதை பழுது நீக்கும் வேலையை தானே செய்ய முடிவெடுத்தார்.
![]() |
உயிர்களின் மீது அக்கறை உறுதி கூறியது சி.ஐ.எஸ்.எப்.,
மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., வெளியிட்ட வீடியோ, வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. கிரில் கம்பிகளால் ஆன ஜன்னலில் தலையை விட்டு தேடிய மாடு, வெளியே எடுக்க முடியாதபடி சிக்கியதால் கத்திக் கொண்டு இருந்தது.
![]() |
இதைப்பார்த்த சி.ஐ.எஸ்.எப்., வீரர் ஒருவர், மிகுந்த கவனத்துடன் மாட்டின் தலை, கொம்பை பிடித்து கிரில் ஜன்னலின் இடைவெளியில் அதை தள்ளி விட்டு காப்பாற்றினார். வீடியோவை வெளியிட்ட சி.ஐ.எஸ்.எப்., 'இந்த மீட்பு நடவடிக்கை, உதவி தேவைப்படும் ஒவ்வொரு உயிரின் மீதும் நாங்கள் கொண்டுள்ள கருணை, அக்கறை, அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது' என்று தெரிவித்துள்ளது.
அம்பானி மருமகளின் அசத்தல் நடனம்
விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில், அவரது இளைய மருமகள் ராதிகா மர்ச்சென்ட் நிகழ்த்திய நடனம், இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்தது.
![]() |
தொழில்நுட்பம் அதிகமானால் தொல்லைகளும் அதிகமாகும்!
பஞ்சாபில் மின்சார காரை நிறுத்தி விட்டு, அதன் உரிமையாளர் வெளியே வந்த நிலையில், ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் கொண்ட அந்த கார், தானாக 'லாக்' செய்து கொண்டது. அத்துடன், தானாக ஸ்டார்ட் ஆகி சாலையில் செல்லவும் ஆரம்பித்தது. சற்று தொலைவில் நின்றிருந்த அதன் உரிமையாளர், விபரீதத்தை உணர்ந்து ஓடி வந்தார். 'ஓரமா போங்க' என்று சாலையில் செல்வோரை கூச்சலிட்டு எச்சரித்தபடியே வந்தார். சாலையில் சிறிது துாரம் சென்ற கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடையில் மோதியது.
![]() |
அப்படியும் நிற்காமல், சற்று தொலைவு சென்று மரத்தின் மீது மோதி நின்றது. செல்ல வழியற்ற நிலையிலும், காரின் சக்கரங்கள் சுழன்று கொண்டே இருந்தன. கடைசியில், கண்ணாடியை உடைத்து, காரை நிறுத்தினார் உரிமையாளர்.இந்த சம்பவத்தின் வீடியோவை பதிவிட்ட நீத்து என்பவர், 'தொழில்நுட்பம் அதிகமானால், தொல்லைகளும் அதிகரிக்கும்' என்று கூறியுள்ளார். வலைதளவாசிகளும் அதை ஆமோதிக்கின்றனர்.




