தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ ஹைட்ரஜன் புரட்சி; நிகழ்கால சாதனை

ஹைட்ரஜன் புரட்சி; நிகழ்கால சாதனை

ஹைட்ரஜன் புரட்சி; நிகழ்கால சாதனை


UPDATED : ஆக 02, 2026 03:51 AM

ADDED : ஆக 02, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2026 03:51 AM ADDED : ஆக 02, 2026 03:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சேதுராமன் சாத்தப்பன் -:

நம் நாட்டில், ஹைட்ரஜன் ரயில்கள் தடம் பதிக்கத் துவங்கியுள்ளன. திரைக்கு பின்னால் ஒரு இந்திய ஸ்டார்ட்--அப் நிறுவனம் ஆச்சரியப்படத்தக்க வகையில் புரட்சியை படைத்துக் கொண்டிருக்கிறது.

ஹைட்ரஜனை பத்திரமாக சேமித்து, துாரத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய 'உயர் அழுத்த கலப்பு சேமிப்புச் சிலிண்டர்கள்' தயாரிப்பில், இந்தியா இன்னும் பிற நாடுகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. இந்த இறக்குமதி சுமையால் அதிக செலவு, நீண்ட காத்திருப்பு, அடுக்கடுக்கான லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்கள் என, இந்திய நிறுவனங்கள் தவித்து வந்தன. இந்தச் சவாலை உடைத்தெறிய, 2022-ல் அஜித் பாபு, வோரா ஆகியோர் இணைந்தது தான் 'குட்லைப் மொபிலிட்டி' எனும் தீர்க்கதரிசனப் பயணம். இவர்கள் உருவாக்கும் 700- பார் அழுத்தத்தைத் தாங்கும் 'டைப் IV' மற்றும் 'டைப் V' சிலிண்டர்கள், வெறும் சேமிப்புக் கலன்கள் மட்டுமல்ல; அதிநவீன காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தில் சுற்றப்பட்ட காலத்தின் முன்னேற்றக் கேடயங்கள்!

ஏன் இது ஒரு மைல்கல்?


இறக்குமதி செலவை குறைத்து, இந்தியாவின் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு' தோள்கொடுப்பது மட்டுமல்லாமல், நாட்டின் ஹைட்ரஜன் வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி தேவைகளுக்கு உள்நாட்டு உயிரோட்டத்தை இவர்களது தயாரிப்புகள் அளிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவோடு இயங்கும் இந்த நிறுவனம், 2040-க்குள் 3.8 லட்சம் கோடி ரூபாயை தொடவிருக்கும் இந்தியாவின் கிளீன்டெக் சந்தையில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

ஹைட்ரஜன் சிலிண்டர்கள் மட்டுமின்றி, பேட்டரி அனலிட்டிக்ஸ், லித்தியம் -ஹைட்ரஜன் இணைந்த 'ஹைபிரிட்' ஆற்றல் அமைப்புகள் என, எதிர்காலத்தின் எரிபொருள் தேவையை இப்போதே செதுக்கி வருகின்றனர். இந்நிறுவனத்துக்கு 'ஸ்டார்ட்-அப் மகாகும்ப் 2025' விருது, 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' சர்வதேச அங்கீகாரம் மற்றும் 'கம்மின்ஸ் இந்தியா' உள்ளிட்ட அமைப்புகளின் நிதி ஆதரவுகளும் மகுடமாகச் சேர்ந்துள்ளன.தொடர்புக்கு: https://www.gudlyfmobility.com/

உங்கள்சந்தேகங்களுக்கு: இ-மெயில்: Sethuramansathappan@gmail.com; அலைபேசி: 98204 51259; இணைய தளம்: www.startupand businessnews.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us