sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பயன்படுத்திய மருத்துவ சாதனங்கள் இறக்குமதி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பாதிக்கும்

/

பயன்படுத்திய மருத்துவ சாதனங்கள் இறக்குமதி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பாதிக்கும்

பயன்படுத்திய மருத்துவ சாதனங்கள் இறக்குமதி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பாதிக்கும்

பயன்படுத்திய மருத்துவ சாதனங்கள் இறக்குமதி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பாதிக்கும்

3


ADDED : அக் 28, 2024 01:47 AM

Google News

ADDED : அக் 28, 2024 01:47 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பயன்படுத்திய பின், புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு, இந்திய மருத்துவ சாதனங்கள் தொழில் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.

இது, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் எனவும் வேதனை தெரிவித்து உள்ளனர்.

நாட்டின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இயங்கும் சிறிய மருத்துவமனைகளுக்கும் குறைந்த செலவில் மருத்துவ சாதனங்கள் கிடைக்க வழி செய்யும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சுகாதார சேவைகள் பொது இயக்குனரகத்தின் ஆலோசனையின்படி, புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சாதனங்கள் இறக்குமதி பட்டியலை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது.

அனுமதி


இதில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம், 'கம்பியூடட் டோமாகிராபி' எனப்படும் சி.டி., ஸ்கேன் இயந்திரம், அதிநவீன எக்ஸ்ரே இயந்திரம், 'ரோபோடிக் சர்ஜிகல் சிஸ்டம்' உட்பட 38 உயர் ரக, அதிக மதிப்பு கொண்ட சாதனங்கள் இடம்பெற்றிருந்தன.

இதே போன்று, கடந்த ஆண்டு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில், 50 மருத்துவ சாதனங்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, இந்திய மருத்துவ சாதனங்கள் தொழில் கூட்டமைப்பினர் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய நாங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, சாதனங்களின் எண்ணிக்கையை மட்டும் அரசு குறைத்து உள்ளது.

ஏமாற்றம்


தொடர்ச்சியாக, வளர்ந்த நாடுகளில் இருந்து, எந்த ஒழுங்குமுறை ஆய்வோ, செயல்திறன் சரிபார்ப்போ இல்லாமல், நிராகரிக்கப்பட்ட, காலாவதியான தொழில்நுட்ப மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

புதிய பட்டியலில், இந்திய உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் 90 சதவீத சாதனங்கள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றில், நான்கில் ஒரு பங்கு, புதுப்பிக்கப்பட்டசாதனங்களாக இருக்கின்றன.

ஆபத்து


மேலும், புதிய மருத்துவ சாதனங்களின் கடுமையான தர நிர்ணயத்துடன் ஒப்பிடுகையில், இவற்றில் தரம் குறைவாக இருக்கும் என்பதால், நோயாளிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்.

எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஒருபுறம், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியை அதிகரிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களை அளிக்கும் அரசு, மறுபுறம், வளர்ந்த நாடுகளால் கைவிடப்பட்ட மருத்துவ சாதனங்களை இந்திய மருத்துவமனைகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது.

இந்த முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us