sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தேர்தல்ல கேக்கப்போகுது கொலுசு சத்தம்!

/

தேர்தல்ல கேக்கப்போகுது கொலுசு சத்தம்!

தேர்தல்ல கேக்கப்போகுது கொலுசு சத்தம்!

தேர்தல்ல கேக்கப்போகுது கொலுசு சத்தம்!


UPDATED : பிப் 20, 2024 06:24 AM

ADDED : பிப் 20, 2024 06:21 AM

Google News

UPDATED : பிப் 20, 2024 06:24 AM ADDED : பிப் 20, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'டிவி' முன் அமர்ந்து, தமிழக பட்ஜெட் அறிவிப்புகளை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சித்ரா.

மார்க்கெட்டுக்கு சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா, இந்த வருஷமாவது நம்மூருக்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஸ்கீம் அறிவிச்சிருக்காங்களா... வழக்கம்போல புறக்கணிச்சிட்டாங்களா...'' என நோண்டினாள்.

''இதே கேள்வியை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டத்துக்கு வந்திருந்த கனிமொழியிடம், நிருபர்கள் நேருக்கு நேரா கேட்டிருக்காங்க. உடனே, கட்சிக்காரங்க எழுதிக் கொடுத்த பேப்பர்ல இருந்த தகவல்களை படிச்சுக் காண்பிச்சிருக்காங்க,''

Image 1234473

''நிருபர்களோ விடாப்பிடியா, 'மதுரையில நுாலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டியிருக்கிற மாதிரி, கோவையில மூனு வருஷத்துல எதுவுமே செய்யலையேன்னு கேட்டிருக்காங்க.

அதுக்கு, கோவையிலும் நுாலகம் கட்டித்தரச் சொல்லி கோரிக்கை வந்துருக்கு; முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வோம்னு சொல்லியிருக்காங்க,''

''இப்போ, கருணாநிதி நினைவு நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்போறதா அறிவிச்சிருக்காங்க.

அப்புறம் ரூ.1,100 கோடியில, 20 லட்சம் சதுர அடியில் ஐ.டி., பார்க், அவிநாசி - மேட்டுப்பாளையம் இடையே, நான்கு வழிச்சாலை உருவாக்கப் போறதா சொல்றாங்க,''

நல்லாயிருக்கு; செய்யணுமே!


''மித்து, இதெல்லாம் கேட்குறதுக்கு நல்லாயிருக்கு; செய்யணுமே. மேட்டுப்பாளையம் பை பாஸ் திட்டம் அறிவிச்சு பல வருஷமாச்சு. இப்போ, நிதி கேட்டு சென்ட்ரல் கவர்மென்ட்டுக்குத் தள்ளி விட்டுட்டாங்க...''

''இதே மாதிரி, சென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு மட்டும் நிதி ஒதுக்குறாங்க. கோவை மெட்ரோவுக்கு நிதி கேட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப் போறதா சொல்றாங்க.

ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷனும், ரெண்டு கவர்மென்ட்டுக்கு இடையில இணக்கமில்லாம நின்னுட்டு இருக்கு. இதுல, மெட்ரோவுக்கு நிதி கொடுப்பாங்கன்னு நம்பிக்கையே இல்லை.

ஆனா, நம்மூர் ஆளுங்கட்சிக்காரங்க, 9,000 கோடி ரூபா தமிழக அரசு ஒதுக்குனது மாதிரி, போஸ்டர் அடிச்சு, ஊரெல்லாம் ஒட்டுனாங்க,''

''கருணாநிதி பேர்ல நுாலகம் கட்டுறது நல்ல விஷயம் தான்; இருந்தாலும், ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல கட்டுன அறிவுசார் மையத்துக்கே, இன்னும் போதுமான புத்தகங்கள் வாங்கலை.

இதே மாதிரி, வார்டு அளவுல இருக்குற நுாலகங்கள்லயும் புத்தகம், பேப்பர் இருக்கறதில்லை. ஆளுங்கட்சி நிர்வாகி வார்டுல, துவங்குன நுாலகமும் புத்தகம் இல்லாமத்தான் இருக்குதாம்,''

ஆளுங்கட்சி ஜெட் வேகம்


''அதெல்லாம் இருக்கட்டும். லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ரெடியாகிட்டாங்களா...''

''ஆளுங்கட்சி தரப்புல, ஜெட் வேகத்துல போயிட்டு இருக்காங்க. பூத் கமிட்டி தயாரா இருக்கு. ஒவ்வொரு பூத்துக்கும் நிர்வாகிகள் நியமிச்சிருக்காங்க. அமைச்சர் மகேஷ் தலைமையில நடந்த கூட்டத்துல, அதிக ஓட்டு வாங்கிக் காட்டுவோம்னு, கட்சி நிர்வாகிங்க சபதம் எடுத்துருக்காங்க. அதனால, கூட்டணி கட்சிக்கு கோவையை ஒதுக்கக் கூடாதுங்கிறதுல, ஆளுங்கட்சிக்காரங்க திடமான முடிவுல இருக்காங்களாம். யார் வேட்பாளருங்கிறதுதான், சஸ்பென்ஸா இருக்குதாம்,''

''அடுத்த வாரம் பிரதமர் மோடி, பல்லடத்துல நடக்குற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வர்றாரு. அவரோட வருகை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரின்னு நாலு தொகுதியிலயும் பாதிப்பை ஏற்படுத்தும்னு நினைக்கிறாங்க.

அதனால, வேட்பாளர் தேர்வுல கோட்டை விட்டுறக் கூடாதுன்னு, தி.மு.க., தலைமையில ரொம்பவே உஷாரா ஆலோசனை செஞ்சுட்டு இருக்கறதா, உடன்பிறப்புகள் சொல்றாங்க,''

''கொங்கு மண்டல பொறுப்பை, உதயநிதிகிட்ட குடுத்திருந்தாலும், கோவை தொகுதியை மட்டும் கூடுதலா கவனிக்கிறதுக்கு, அமைச்சர் மகேஷ்கிட்ட பொறுப்பு கொடுப்பாங்கன்னு சொல்றாங்க,''

Image 3555973

கணக்கெடுக்குறாங்க...கொலுசு வருமோ


''ஆளுங்கட்சி தரப்புல இப்பவே, வீதி வீதியா கணக்கெடுக்குறாங்களாமே.. வரப்போற தேர்தலுக்கும் கொலுசு கொடுப்பாங்களான்னு, ஜனங்க பேசிக்கிறாங்களே...''

''பூத் கமிட்டியை சேர்ந்தவங்க, வாக்காளர் பட்டியல்ல இருக்கற ஓட்டுகளை சரிபார்க்குறாங்களாம். யாராச்சும் முகவரி மாறி போயிருந்தாங்கன்னா, அவங்க மொபைல் போனுக்கு கான்டாக்ட் பண்ணி, எந்த பூத்துல ஓட்டு இருக்குன்னு உறுதிப்படுத்துறாங்க,''

''வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் நகல், மொபைல் போன் எண் வாங்குறாங்க. இதெல்லாம் எதுக்குன்னு ஜனங்க கேட்டா, 'பொறுத்திருந்து பாருங்க'ன்னு சொல்லிட்டு, நமட்டுச் சிரிப்புடன் போறாங்களாம்,''

'மாஜி'யின் விசுவாசி மகன்


''அ.தி.மு.க., தரப்புல வேட்பாளர்களை ரெடி பண்ணிட்டதா சொல்றாங்களே... உண்மையா...''

''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். எலக்சன்ல பணத்தை வாரி இறைச்சாகணும். கட்டுக்கட்டா கரன்சி வச்சிருக்கிறவங்க மட்டுமே, களத்துல இறங்க முடியும். 'மாஜி' விசுவாசி தொண்டாமுத்துாரை சேர்ந்த 'லேடி'யின் மகனை பொள்ளாச்சியிலும், சின்னவேடம்பட்டியை சேர்ந்த விவசாய சங்கத்தை சேர்ந்தவரின் மகனை, கோவையிலும் நிறுத்துறதுக்கு 'பிளான்' போட்டிருக்காங்களாம்,''

''நீலகிரியை கூட்டணி கட்சிக்காரங்களுக்கு, தள்ளி விடலாம்னு நினைக்கிறாங்க. ஆனாலும், தற்போதைக்கு வனத்துறையை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருத்தரை, 'செலக்ட்' பண்ணி இருக்காங்களாம்...''

நடிகர் கட்சியின் செல்வாக்கு எப்படி


''தி.மு.க.,வுல நீலகிரியில் மறுபடியும் ராஜாவே, போட்டி போடப் போறது உறுதியாகிடுச்சுன்னு சொல்றாங்களே...''

''ஆமாப்பா, உண்மைதான்! நீலகிரியிலயும், பொள்ளாச்சியிலயும் 'சிட்டிங்' எம்.பி.,க்களுக்கே மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப் போறாங்களாம். எம்.ஜி.ஆரை விமர்சனம் செஞ்சதுனால, ராஜாவை 'டிபாசிட்' இழக்கச் செய்யணும்னு, இ.பி.எஸ்., ஆவேசமா பேசுனாரு. அதனால, மறுபடியும் இதே தொகுதியில போட்டி போட்டு, 'கெத்து' காட்டணும்னு நினைக்கிறாராம் ராஜா,''

''அதே நேரம், தொகுதி கைவிட்டு போயிடக் கூடாதுங்கிறதுல ரொம்பவும் கவனமா செயல்படுறாராம்,''

களமிறங்குது தாமரைக்கட்சி


''வேற விஷயம் சொல்றேன் கேளு! கோவில்மேட்டுல போலீஸ் செக்போஸ்ட்டும், 'டாஸ்மாக்' பாரும் ஒரே சுவத்துலதான் இருக்கு. அந்த 'பார்'ல 24 x 7 சரக்கு சேல்ஸ் நடக்குதாம். ஆனா, போலீஸ் கண்டுக்கிறதே இல்லையாம்.

சரக்குக்கு சரக்கு, மாமூலுக்கு மாமூலுன்னு போலீஸ்க்கு வலுவா கவனிப்பு நடக்குதாம். விடிய விடிய அங்க சரக்கு விக்கிறதைக் கண்டிச்சு, அந்த ஏரியா லேடீஸ் போராட வந்தப்போ, 'துாக்கி உள்ளே போட்ருவேன்'னு இன்ஸ்., மெரட்டி விரட்டிட்டாராம். இந்த பிரச்னையை, தாமரை கட்சிக்காரங்க கையில எடுத்து போராடப் போறாங்களாம்,''

''அக்கா... நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சிட்டிக்குள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடக்குதாம். 'எப்2' லைசென்ஸ் வச்சிருக்கிற ஒருத்தரு, மிக பிரமாண்டமா கிளப் நடத்துறாராம். தமிழகத்தின் முக்கியமான வி.ஐ.பி.,க்கு வேண்டப்பட்டவராம். போலீஸ்காரங்க அட்வைஸ் செஞ்சாலும் கேக்குறதில்லையாம். நைட் ரெண்டு மணி வரைக்கும் ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம் நடக்குதாம். என்ன செய்றதுன்னு தெரியாம போலீஸ்காரங்க முழிக்கிறாங்க''

அறங்காவலர் ஆபீசில் போட்டோ 'மிஸ்ஸிங்'


''கோவில் அறங்காவலர் அலுவலகத்துல சி.எம்., போட்டோ இல்லைன்னு சொல்றாங்களே... உண்மையா,''

''ஆமா, உண்மைதான்! சுக்ரவாரப்பேட்டை காந்தி பார்க் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில்ல இருக்கற அறங்காவலர் அலுவலகத்துல சி.எம்., போட்டோ இல்லை. ஆனா, மினிஸ்டர்ஸ் உதயநிதி, சேகர்பாபு போட்டோக்கள் மட்டும் வச்சிருக்காங்க. இதைப்பார்த்து யாராவது ஆச்சரியப்பட்டு கேட்டா, 'இனி, வரப்போற காலம் இவங்க தானே, அதுதான் இவுங்க போட்டோ வச்சிருக்கேன்னு சொல்றாராம்,''

லட்சத்தில் 'டீல்'; விரக்தியில் டீச்சர்ஸ்


''பணி மாறுதல் கொடுக்கறதுக்கு, அஞ்சு 'ல'கரம் கேக்குறாங்களாமே...''

''கவர்மென்ட் வேலை வாங்கித்தர்றதுக்கு, லஞ்சம் வாங்குறதை கேள்விப்பட்டு இருக்கேன்; டிரான்ஸ்பர் தர்றதுக்கும் கரன்சி கேக்குறாங்களா. எந்த துறையில இந்த கூத்து நடக்குது...''

''பள்ளி கல்வித்துறையிலதான் கேக்குறாங்களாம். காலியா இருக்குற ஆசிரியர் பணியிடங்களுக்கு 'டிரான்ஸ்பர்' கேட்டு விண்ணப்பிச்சா, அஞ்சு 'ல'கரம் கேட்குறதா சொல்லி, டீச்சர்ஸ் புலம்புறாங்க.

ஆளுங்கட்சி நிர்வாகிகளோட சிபாரிசு கடிதம் இணைச்சாலும், சல்லிக்காசு குறைக்கறதில்லையாம். தேர்தல் தேதி அறிவிச்சிட்டா, கவுன்சிலிங் தள்ளிப் போயிடும்; இப்போதைக்கு டிரான்ஸ்பர் கிடைக்காதுன்னு, டீச்சர்ஸ் விரக்தியில இருக்காங்க,'' என்றபடி, சமையலறைக்குள் சென்றாள் சித்ரா.

சேனலை மாற்றினாள் சித்ரா.






      Dinamalar
      Follow us