sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு

/

போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு

போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு

போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்யும் இளம் வயதினர் அதிகரிப்பு

13


ADDED : மார் 29, 2025 07:00 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:00 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; 'தமிழகத்தில் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது,'' என, தமிழக மன நல மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் கூறினார்.

அவர் அளித்த பிரத்யேக பேட்டி:


உலகில், 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவர்களில், 18 வயதுக்கும் கீழானவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் என உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு, 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதேபோல, தற்கொலை பட்டியலில், இந்தியாவில் உள்ள மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழகத்தின், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளன.

கொரோனா பரவலுக்கு முன், இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், தற்கொலை செய்து கொள்வோர் 9.8 சதவீதமாக இருந்தனர். அது, தற்போது 12.4 சதவீதமாக உயர்ந்துள்ளது; இது பெரும் ஆபத்தானது.

மனித வாழ்வு குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் என்பதையும் நினைவுப்படுத்துகிறது. இதற்கு முன், 20 வயதுக்கும் குறைவான இளம் வயதினர் சாலை விபத்துகளில் பலியாவது அதிகரித்து வந்தது.

தற்போது, இளம் வயதினர் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வோர் அதிகரித்து வருகின்றனர். நுாறில், 10 பேராவது, போதை வஸ்துகளால் தற்கொலை செய்து கொள்வதும் தெரிய வந்துள்ளது.

அதேபோல, குடும்ப சூழல் காரணமாக, 47 சதவீதம் பேர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. நீண்ட நாள் நோய் தாக்கம் காரணமாக, 17 சதவீதம் பேர், கணவன், மனைவி தகராறு காரணமாக, 5.5 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காதல் தோல்வியால், 20 - 25 வயதுடையோரில் 4 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்வதும் தெரிய வந்துள்ளது. ஆய்வுகள், ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பதன் வாயிலாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்கொலைக்கு பல விதமான காரணங்கள் இருந்தாலும், எந்த பிரச்னைக்கும் உயிரை விடுவது தீர்வல்ல. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us