sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

புகார் கொடுத்த லேடி ஆபீசரை பதறவைத்த இன்ஸ்.,; கார் பறித்த போலீசை கோர்ட்டில் கதறவிட்ட திருடன்!

/

புகார் கொடுத்த லேடி ஆபீசரை பதறவைத்த இன்ஸ்.,; கார் பறித்த போலீசை கோர்ட்டில் கதறவிட்ட திருடன்!

புகார் கொடுத்த லேடி ஆபீசரை பதறவைத்த இன்ஸ்.,; கார் பறித்த போலீசை கோர்ட்டில் கதறவிட்ட திருடன்!

புகார் கொடுத்த லேடி ஆபீசரை பதறவைத்த இன்ஸ்.,; கார் பறித்த போலீசை கோர்ட்டில் கதறவிட்ட திருடன்!


UPDATED : நவ 05, 2024 05:56 AM

ADDED : நவ 04, 2024 10:53 PM

Google News

UPDATED : நவ 05, 2024 05:56 AM ADDED : நவ 04, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளி கொண்டாட்டம் முடிந்து, சித்ராவும், மித்ராவும் கந்தசஷ்டி மூன்றாம் நாள் விழாவில் பங்கேற்க திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலுக்கு சென்றனர். அலைமோதிய கூட்டத்துக்கு மத்தியில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, வெளி பிரகாரத்தில் அமர்ந்தனர்.

''மித்து, பூண்டி நகர்மன்ற கூட்டத்தில நடந்த கூத்து தெரியுமா?'' ஆரம்பித்தாள் சித்ரா.

''சொல்லுங்க்கா,''

''வருஷத்துக்கு, 6 சதவீதம் சொத்து வரி உயர்வுங்கிற அரசு உத்தரவுக்கு எதிரா தீர்மானம் நிறைவேத்தணும்ன்னு, பூண்டி நகராட்சியில நடந்த மன்றக் கூட்டத்துல மா.கம்யூ., கட்சியை சேர்ந்த ரெண்டு கவுன்சிலர்கள் சொல்லியிருக்காங்க. இது அரசின் கொள்கை முடிவுங்கற தால எதுவும் செய்ய முடியாதுன்னு, நகர்மன்ற தலைவரு சொல்ல, ரெண்டு பேரும் வெளி நடப்பு செஞ்சாங்க...''

''இதுல என்ன கூத்துன்னா, ஆளும் கூட்டணியில இருக்கற கட்சிக்காரங்க காட்டின எதிர்ப்பைக்கூட, எதிர்க்கட்சி வரிசையில இருக்கற அ.தி.மு.க., பா.ஜ., கவுன்சிலர்கள் காண்பிக்கலைங்கறது தான். எந்த ரியாக்ஷனும் காட்டாம, 'கப்சிப்'ன்னு இருந்துட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா அந்த நகராட்சியில, மாசம் ஒரு 'சிட்டி' உருவாகுதாம். நகராட்சிக்கு நல்ல வருமானம் போல...'' என பேச்சை மாற்றினாள் மித்ரா, ''நீ ஏதோ 'பொடி' வைச்சு பேசற மாதிரில்ல இருக்கு,'' என்றாள் சித்ரா.

''ஓ...உங்களுக்கு புரிஞ்சிருச்சா...'' என சிரித்தாள் மித்ரா.

'பிரேக்' பிடிக்காத பஸ்


''அக்கா... போன வாரத்தில் ஒரு நாள், திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு புறப்பட்ட கவர்மென்ட் பஸ்சில் 'பிரேக்-சூ' வேலை செய்யவில்லை. வீரபாண்டி பிரிவு அருகே தான் இந்த விஷயம் டிரைவருக்கு தெரிய வந்தது. அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்த டிரைவர் டிரை பண்ணினார். ஆனால், நிறுத்த முடியவில்லை,''

''என்னங்க இப்படி பண்றீங்க. எங்களுக்கு பயமாக இருக்குது, என பெண் பயணிகள் கதற, அது ஒண்ணுமில்லீங்க. பல்லடத்துல சரி பண்ணிட்டு போயிடலாம் என்ற டிரைவர், எக்ஸலேட்டரை அழுத்தாமல், லாவகமாக பஸ்சை ஓட்டினார். அதற்குள் இந்த மேட்டர் குறித்து, கண்டக்டர் பல்லடம் டிப்போவுக்கு தகவல் கொடுத்துள்ளார்,''

''பஸ்ஸை பஸ் ஸ்டாண்ட் கொண்டு செல்லாமல், டிப்போவுக்கு கொண்டு சென்றுள்ளனர். வேகத்தடையை பஸ் சற்று மெதுவாக கடக்க, 'படக்' என்று, பஸ்சுக்குள் ஏறிய ஊழியர்கள், பிரேக்கை சரிசெய்து பஸ்சை நிறுத்தினர். அப்புறம் வேறு பஸ்சில், பேசன்ஜரை அனுப்பி வைக்கப்பட்டனராம்,'' மித்ரா விளக்கினார்.

சஷ்டிக்கு வசூல் அபாரம்


''ஏதோ டிரைவர் எக்ஸ்பிரீயன்ஸா இருந்ததால பரவாயில்ல. இல்லாட்டி என்ன ஆயிருக்கும்,'' ஆவேசப்பட்ட சித்ரா, ''சஷ்டி விரதம் இருக்க 'காப்பு' கட்ட பணம் வசூல் செய்தார் களாம்...'' என்றாள்.

''எந்த கோவிலுங்க்கா...''

''இந்தாண்டு கந்தசஷ்டிக்கு பொங்கலுாருக்கு பக்கத்துல இருக்கற அலகுமலைக்கு போய் காப்பு கட்டலாம் என்று அதிகப்படியான பக்தர்கள் போயிருக்காங்க. காப்பு கட்டும் போது, 200 ரூபாய் டிக்கெட் வாங்கணும் கட்டாயப் படுத்தியிருக்காங்க...''

''பணம் இல்லாத பக்தர்கள் சிலர் முருகனை வேண்டிக்கொண்டு அப் படியே திரும்பி சென்றனர். அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்திருந்த நிலையில் போதிய ஏற்பாடுகளும் செய்யவில்லை, மக்கள் கூட்டத்தில் சிக்கித் திணறி போயிட்டாங்களாம். பக்தர்களுக்கு உரிய வசதி கிடைக்கிறதை, ஹிந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டுமென, பி.ஜே.பி., நிர்வாகிகள் சிலர், ஜே.சி., கிட்ட பெட்டிஷன் கொடுத்திருக்காங் களாம்,''

''வேற எந்த கோவிலிலும் இப்படி இல்லையே. அங்க மட்டும் ஏன் கட்டாய வசூல் பண்றாங்கன்னு, இப்ப எல்லாரும் கேக்க ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''கரெக்ட்டுங்க்கா...'' என மித்ரா ஆமோதித்தாள்.

'சாக்கு போக்கு' ஆபீசர்


''அக்கா... தாராபுரம் தாலுகா பகுதிகளில் ரேஷன் கடைகளில் இருந்து இலவச அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக தொடர்ந்து பரவலா புகார் வருதுங்ளாம். இதப்பத்தி பொதுமக்கள் சிலர் கம்ளைன்ட் கொடுத்த போது, கூட்டுறவுத் துறை அலுவலர்கள், 'இது பழைய போட்டோ,' என்று கூறி புகாரை தள்ளுபடி செய்து விட்டனர்,''

''இதனால், பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்து சண்டே ஈவ்னிங் டூவீலர்களில் எடுத்துச் சென்ற அரிசி மூட்டையை எடுத்துச் செல்லும் பொழுது ஜி.பி.எஸ்., பதிவுகளுடன் போட்டோ எடுத்து, இடம், தேதி என டீடெய்லாக மறுபடியும் கம்ளைன்ட் அளித்துள்ளனர். இனியாவது அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா என்று மக்கள் காத்திருக்கின்றனர்,'' மித்ரா கூறினாள்.

'சில்லிங்' சேல்ஸ் அபாரம்


''சிட்டியில, இவ்ளோ கெடுபிடி இருந்தும் இன்னும் சில இடங்களில் 'சில்லிங்' தாராளமா ஓடுது,'' என அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் சித்ரா.

''சிட்டி லிமிட்ல இதுக்கு முன்னாடி இருந்த நிலையை விட, இப்போது, இல்லீகல் மது விற்பனை, 'சில்லிங்' சேல்ஸ் ஆகியவற்றுக்கு கமிஷனர் கிடுக்குப்பிடி போட்டு விட்டார். ஆனால், அதையும் மீறி, யூனியன் மில் ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே என, சில கடைகளில் 'சில்லிங்' சேல்ஸ், காலை எட்டு மணிக்கே ஆரம்பிச்சிடறாங்க...''

''மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடையையொட்டி உள்ள பாருக்குள்ள போய்ட்டு வர்றது வெட்ட வெளிச்சமாக தெரியுது. இதப்பத்தி சம்பந்தப்பட்ட ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ், ஒற்றர்படைக்கு தெரியுமானு தெரியல. ஆனால், ஒன்னு மித்து, ஸ்டேஷன் முக்கிய புள்ளிக்கு தெரியாம இது நடக்குமா?'' கேட்டாள் சித்ரா.

''நீங்க சொல்றது, 100க்கு 100 சரிங்க்கா,'' என்ற மித்ரா, ''காரை பறிச்சு வச்சுட்டாங்கனு, மாஜிஸ்திரேட் முன்னாடி குமுறலை ஒருத்தரு கொட்டிட்டாரு...'' என சொன்னாள்.

காரை 'லபக்'கிய போலீசார்


''அது எங்கடி நடந்துச்சு...''

''தாராபுரம் பக்கத்துல மூலனுார் ஸ்டேஷன் லிமிட்டில், ஒரு வீட்டில் திருட்டு நடந்துச்சு. அதில், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செஞ்சுட்டாங்க. இந்த கேஸில், கைது செய்யப்பட்ட நபரின், காரை, ரெண்டு போலீஸ்காரங்க பறிமுதல் செய்து வச்சுட்டாங்களாம்,''

''கேஸூக்கு சம்பந்தமில்லாத பறிமுதல் செஞ்ச காரை குடுத்துடுங்கன்னு அந்நபர் பலதடவை கேட்டும் கொடுக்கலையாம். இதனால, அதிருப்தியில் இருந்தவர், கோர்ட்டில் ஆஜரான போது, மாஜிஸ்திரேட் முன்னாடி, 'என்னோட கேஸூக்கு சம்பந்தமில்லாம காரை வாங்கி வச்சுட்டு, தரமாட்டிங்கிறாங்க ஐயா,'ன்னு சொல்லி கதறிட்டாராம். இது உயரதிகாரி காதுக்கு போகவே, புகாரின் உண்மை தன்மைப்பத்தி தீவிரமா விசாரிச்சுட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.

முக்கோண கோஷ்டி பூசல்


''என்ன கொடுமை இது...'' என்ற சித்ரா, ''திருப்பூரை பொருத்தவரை, ஆளும்கட்சியில் ஏற்கனவே, மினிஸ்டர், எம்.எல்.ஏ.,ன்னு ரெண்டு கோஷ்டி இருக்குது. அது இப்ப மேயரோடு சேர்த்து மூனாக மாறிடுச்சு. அதுமட்டுமில்லாம, மூனு பேர் ஒரே இடத்து நிகழ்ச்சியில் பங்கேற்க கூடுமானவரை தவிர்த்திடறாங்க,''

''அதுமட்டுமில்லாம, சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கூட, சொத்து வரி உயர்வு தொடர்பாக வெளிப்படையாக மேயர் மீது எம்.எல்.ஏ., தன்னோட கோபத்தை காட்டினாராம். அவரும் கோவமா பதில் சொல்லியிருக்காரு. இதனை கவனித்த கட்சிக்காரங்க ரெண்டு பேரையும் சமாதனப்படுத்தியிருக்காங்க,''

''ஆனால், எப்படியோ விஷயம் வெளியே கசிந்து விட்டது. கட்சி கூட்டத்தில் நடக்கும் விஷயத்தை, வெளிய சொல்லி, கட்சி மானத்தை காத்துல பறக்க விடுறதை முதல்ல நிறுத்துங்க. முக்கிய பொறுப்பில் இருப்பவர்களே தங்களுக்குள் விட்டு கொடுக்காமல், யார் பெரியவன் என 'ஈகோ' பார்த்துட்டு, மோதி கொள்வதை நிறுத்த வேண்டுமென, உடன்பிறப்புகள் முக்கிய நிர்வாகிகள்கிட்ட சொல்லிட்டாங்களாம்...'' என்றாள்.

தம்பதியரின் ராஜ்ஜியம்


''அக்கா... ஆயுதப் படைக்குள் தம்பதியரின் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்குதாம்,'' மித்ரா சொன்னதும், ''அட.. அப்படியா,'' என ஆச்சரியப்பட்டாள் சித்ரா.

''ஆமாங்க்கா... ஆயுதப்படை அதிகாரிக்கு, டிரைவராக இருப்பவர், இரண்டு ஆண்டுக்கு மேலாக அங்கேயே தான் இருக்கார். அதே ஆயுதப்படையில் டிரைவரின் மனைவியும் இருக்காங்க. இவங்க ரெண்டு பேர் வைக்கிறது தான் அங்க சட்டமாக இருக்குதாம். தங்கள் பேச்சுக்கு தலையாட்டினா மட்டும்தான் டியூட்டி போடறாங்க. இத்தனைக்கும் அங்கிருக்கிற இன்ஸ்., - எஸ்.ஐ.,க்கள் கூட தட்டி கேட்க முடியாத நிலையில் நிலைமை இருக்குது,''

''சிட்டியில ரொம்ப ஸ்ட்ரிட்டான ஆபீசர் இருந்தும் கூட, ஆயுதப்படையில நடக்குற இந்த தம்பதியர் ராஜ்ஜியம் எப்டி அவருக்கு தெரியாம போச்சுன்னு என்பதே பலரின் கேள்வியா இருக்குது,'' சொன்னாள் மித்ரா.

அழுத்தம் தந்த பரிசு


''மித்து, பல்லடம் அம்மா கேண்டீன்ல வேலை பார்த்த நாலு லேடீஸ திடீர்னு வேலையை விட்டு நிறுத்தினாங்க. இது சம்பந்தமா நாலு பேரும் சி.எம்.,செல்லுக்கு பெட்டிஷன் போட்டிருக்காங்க. அதுக்கான பதில் கடிதத்துல, 'உங்க மகளிர் குழு தான் உங்களை நீக்கிட்டாங்க'ன்னு ரிப்ளை வந்திருக்கு. விசாரிச்சப்ப, அந்த நாலு பேரும் இலைக்கட்சி சப்போர்ட்ல வேலைக்கு வந்ததால ஆளுங்கட்சி பிரஷர் போட்டு நீக்கப்பட்டதா கட்சி வட்டாரத்துல பேச்சு அடிபடுது...''

''இருக்கலாங்க்கா....'' என்ற மித்து, ''அவிநாசி சப்-டிவிஷனில் மட்டும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருக்குது போல...'' என்றாள்

'செக் போஸ்டில்' வசூல்


''நீ சொல்றது புரியலையே...'' சித்ரா சொன்னதும், ''அக்கா, தமிழகத்தில பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நடைமுறையில் இல்லை. ஆனா, அவிநாசியில, நரியம்பள்ளி புதுார்ங்கிற கிராமத்துல உள்ள செக்-போஸ்ட்டில், ஒருத்தர் எப்.ஓ.பி.,ன்னு சொல்லிட்டு, போலீசுடன் சேர்ந்து கிட்டு வசூல் பண்றாராம். குறிப்பாக, தீபாவளிக்கு செம வசூலாம். நாலஞ்சு நாள் லீவுங்கிறதால, ஏகப்பட்ட பேர், ஊட்டிக்கு டூர் போனாங்க. டூரிஸ்ட் வந்த வண்டிகள நிறுத்தி, இஷ்டத்துக்கு, 100, 200ன்னு வசூலை அள்ளிட்டாங்களாம்...'' மித்ரா விளக்கினாள்.

''அங்க செக்போஸ்ட்டே தேவையில்ல. கொரோனா டைமில் போட்டது. இன்னும் அப்டியே வச்சிருக்காங்க,'' என்று சொன்ன சித்ரா, ''அதே ஊர் ஸ்டேஷனில் நடந்த ஒரு கொடுமைய கேளு மித்து,'' சொல்ல ஆரம்பித்தாள்.

யாரா இருந்தா எனக்கென்ன'


''நரியம்பள்ளிபுதுாரில் இருக்கற மாரியம்மன் கோவிலில், ஒரு சிலையை காணோம்னு, அறநிலை இன்ஸ்பெக்டர், அவிநாசி கிரைம் போலீஸ்கிட்ட கம்ளைன்ட் கொடுக்க போயிருக்காங்க... அங்கிருந்த லேடி இன்ஸ்., 'இது என்ன புது டிபார்ட்மென்டா இருக்குது. இங்க நான் தான் இன்ஸ்பெக்டர். நீ... யாரா இருந்தா எனக்கென்ன? சிலையை நீங்களே எடுத்து என்னவோ செஞ்சிட்டு, இங்க வந்து கம்ளைன்ட் குடுக்கறயான்னு, கன்னாபின்னான்னு பேசிட்டாங்களாம்...''

''இத்தனைக்கும் அவங்களும் லேடிதான். என்ன இது இப்படி மரியாதை இல்லாம பேசறாங்கன்னு, மறுபடியும் போனப்ப, அதேமாதிரி தான் பேசினாங்களாம். ஒரு அரசு அதிகாரிக்கே இந்த நெலைமைன்னா, சாமான்யர்களை பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது போல...'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.

அப்போது மழை துளிகள் விழவே, ''ஓகே... மித்து, புறப்படலாம்,'' என சித்ரா நடக்கவும், மித்ரா பின் தொடர்ந்தாள்.






      Dinamalar
      Follow us