தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கிரானைட் வீரமணி மீதான குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்

கிரானைட் வீரமணி மீதான குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்

கிரானைட் வீரமணி மீதான குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்

11


ADDED : நவ 06, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : நவ 06, 2026 05:14 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'கிரானைட்' வீரமணி, 85, அவரது தோழி சாந்தி, 61, உள்ளிட்ட எட்டு பேர் மீதான குற்றங்கள் குறித்து போலீசார் தயாரித்துள்ள குற்றப்பத்திரிகையில், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, 'கிரானைட்' வீரமணி என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த, அவரது தோழி சாந்தி, 61 உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீரமணியால், இதுவரை, 12 சிறுமியர் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும், வீரமணியை மிரட்டி, ஒரு கும்பல் பல கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஞ்சன்குமார், அரசி யல் கட்சி தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடந்துள்ளது.

வீரமணியை சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வைக்க, போலீசார் சிலர் முயற்சிகள் மேற்கொண்ட தகவலும் வெளியாகி உள்ளது. அவர் மீது, 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து, 'குற்றத்தை நிரூபிக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை' என, விசாரணையை முடித்து வைத்து, போலீஸ் அதிகாரிகள், நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர்.

இதற்காக, மிகப்பெரிய அளவில் பணம் கைமாறி உள்ளது. வீரமணியை சிறையில் அடைக்காமல் பார்த்து கொள்கிறேன் என, தொழில் அதிபர் பிரகாஷ் என்பவர், 100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று, பலருக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். தந்தையை காப்பாற்ற, வீரமணியின் மகள் அர்ச்சனா முயற்சித்தது குறித்தும், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

இவ்வழக்கில் கைதான நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியரின் வாக்குமூலம், குற்றம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கொடுக்கப்பட்டது குறித்த ஆவணங்கள் ஆகியவற்றுடன், 1,400 பக்கங்களுக்கு மேல், குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அவர்களுக்கு சிக்கல் நேரிடும். இதனால், தங்களின் பெயர்களை எடுக்க வேண்டும் என, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி வாயிலாக, முதல்வர் விஜய்க்கு, அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

இது தொடர்பாக, இன்று அல்லது நாளை, முதல்வர் நடத்தும் ஆய்வு கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட உள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us