sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முதல்வர் ஸ்டாலினின் ஐரோப்பிய பயணம் குடும்ப முதலீட்டுக்கா... தொழில் வளர்ச்சிக்கா?

/

முதல்வர் ஸ்டாலினின் ஐரோப்பிய பயணம் குடும்ப முதலீட்டுக்கா... தொழில் வளர்ச்சிக்கா?

முதல்வர் ஸ்டாலினின் ஐரோப்பிய பயணம் குடும்ப முதலீட்டுக்கா... தொழில் வளர்ச்சிக்கா?

முதல்வர் ஸ்டாலினின் ஐரோப்பிய பயணம் குடும்ப முதலீட்டுக்கா... தொழில் வளர்ச்சிக்கா?

22


ADDED : ஆக 31, 2025 04:56 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:56 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம், முதலீடுகளை ஈர்க்கவா அல்லது குடும்ப முதலீடுகள் செய்யவா' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்ப, 'தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவே, முதல்வரின் ஐரோப்பிய பயணம்' என, தொழில் துறை அமைச்சர் ராஜா பதில் அளித்துள்ளார். இருவரும் வெளியிட்ட அறிக்கைகள்: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 40 மாதங்களில் நான்கு முறை, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனாலும், மற்ற மாநிலங்களை விட, மிக மிக குறைவான முதலீட்டையே கொண்டு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி முடிய இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

உண்மையிலேயே தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என, தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ல் துபாய், 2023ல் சிங்கப்பூர், ஜப்பான், 2024-ல் ஸ்பெயின், அமெரிக்கா என, நான்கு முறை 40 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இதில், 18,000 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக வந்துள்ளது.

இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள், தமிழகத்தில் இப்போதுள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இதுவரை 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை, அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட தொழில் முதலீடுகளின் தொடர்ச்சியே.

நான் வெளிநாடு சென்றது குறித்து ஸ்டாலின் தவறாக குறிப்பிட்டுள்ளார். என் வெளிநாட்டு பயணத்தால் தொழில் முதலீடுகளை ஈர்த்தது மட்டுமல்ல; அங்குள்ள கால்நடை பண்ணைகளை பார்வையிட்டு, அது போன்ற ஆராய்ச்சி நிலையத்தை, சேலம் மாவட்டம் தலைவாசலில், 1,100 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கினேன்.

நான்கு முறை முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்றும், சொல்லும்படியாக முதலீடுகள் வரவில்லை. கடந்த பயணங்களின் போது, வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல், இம்முறையும் செய்யக்கூடாது.

தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா


அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து, புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் ஒவ்வொன்றும், தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து, தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை, புள்ளி விபரங்களுடன் பல முறை அறிக்கையாக தந்திருக்கிறோம்.

அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.,வின் மத்திய அரசு அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களே, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதை பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு, மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. ஸ்டாலின் தன் ஐரோப்பிய பயணத்தை துவக்கும் முன், இதுவரை தமிழகத்திற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து, செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமை அறிக்கைக்கு பதில் அளிப்பதை விட, ஜெர்மனி - இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் வாயிலாக, தமிழகத்திற்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில் தான் தி.மு.க., அரசு தற்போது கவனம் செலுத்துகிறது.

தான் முதல்வராக இருந்த போது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போண்டா சாப்பிட்டதையே மிகப்பெரிய சாதனையாக கருதிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு, முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் குறித்த புரிதல் இல்லாததில் வியப்பொன்றும் இல்லை.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஸ்டாலினின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும், வேலை வாய்ப்புகளாகவும் மாறும். அப்போது, பழனிசாமிக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவ கட்டமைப்பும், தி.மு.க., அரசில் சிறப்பாக உள்ளது.

-- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us