மோடியுடன் துரை சந்திப்பு அணி மாறுகிறதா ம.தி.மு.க.,?
மோடியுடன் துரை சந்திப்பு அணி மாறுகிறதா ம.தி.மு.க.,?
ADDED : ஆக 05, 2025 03:38 AM

டில்லியில் பிரதமர் மோடியை, தி.மு.க., கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான ம.தி.மு.க.,வின் முதன்மைச் செயலரும், எம்.பி.,யுமான துரை வைகோ சந்தித்துப் பேசினார்.
பார்லிமென்ட்டில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில், இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது, ரஷ்யாவின் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட, நுாற்றுக்கணக்கான இந்தியர்களை, பத்திரமாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர வலியுறுத்தி, 15 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 68 எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை, பிரதமரிடம் துரை அளித்தார்.
தமிழகத்தில், 'தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறி, தே.ஜ., கூட்டணியில் ம.தி.மு.க., இணையக்கூடும்' என்று பரவும் செய்தியை, அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ, மறுத்துள்ள நிலையில், துரை வைகோ, பிரதமர் மோடியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சாதாரணமாக, யாருக்கும் பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காது என்ற சூழலில், துரை வைகோவுக்கு, கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டு, சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது, மீண்டும் ம.தி.மு.க., நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக, யாருக்கும் பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காது என்ற சூழலில், துரை வைகோவுக்கு, கேட்டதும் நேரம் ஒதுக்கப்பட்டு, சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது, மீண்டும் ம.தி.மு.க., நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-நமது டில்லி நிருபர்-