ADDED : மே 08, 2025 12:41 AM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை நம் நாடு எடுத்தது. இதனால் கடுப்பான பாக்., இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை, பாக்., மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு வான்வெளியை மற்ற நாடுகளுக்கும் முழுதுமாக மூடுவதாக பாக்., நேற்று அறிவித்தது. இதற்கிடையே, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாக்., ராணுவம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளை குறிவைத்தே நம் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பாக்., தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படும் என்றும், அப்படி தாக்கினால், அந்நாடு இதுவரை கண்டிராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.