தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஸ்டாலினை ராகுல் நேரில் சந்திக்கிறார்? காங்., தேசிய தலைவர் கார்கே முயற்சி!

ஸ்டாலினை ராகுல் நேரில் சந்திக்கிறார்? காங்., தேசிய தலைவர் கார்கே முயற்சி!

ஸ்டாலினை ராகுல் நேரில் சந்திக்கிறார்? காங்., தேசிய தலைவர் கார்கே முயற்சி!

13


ADDED : அக் 03, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : அக் 03, 2026 06:23 AM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வரும் 10ம் தேதி சென்னை வரும்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே தரப்பில் முயற்சிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தீவுத்திடலில், வரும் 10ம் தேதி நடக்கும், 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில், ராகுல் பங்கேற்கிறார். இந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் விவகாரம், 'இண்டி' கூட்டணியில், தி.மு.க.,வை மீண்டும் இணைப்பது உள்ளிட்டவை குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் ராகுல் பேச வேண்டும் என, கார்கே விரும்புகிறார்.

இது தொடர்பாக, தமிழக காங்., முன்னாள் தலைவர் ஒருவரை, கார்கே மகன் பிரியங் கார்கே சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து, தி.மு.க., பெண் தலைவர் ஒருவரின் வாயிலாக, ஸ்டாலினை, ராகுல் சந்திக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சமீபத்தில், டில்லியில் நடந்த, 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், த.வெ.க., பங்கேற்கவில்லை. த.வெ.க., கூட்டணியில் இருக்கும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை பங்கேற்றன. ஆனால், த.வெ.க., பங்கேற்காதது, காங்., மேலிடத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எனவே, வரும் லோக்சபா தேர்தலில், 'இண்டி' கூட்டணியில், தி.மு.க., மீண்டும் இடம் பெற, பேச்சு நடத்த, கார்கே விரும்புகிறார். சென்னை வரும் ராகுல், ஸ்டாலினை சந்தித்தால், தேசிய அரசியலில் மீண்டும் 'இண்டி' கூட்டணி பலம் பெறும் என, கார்கே தரப்பில் கருதுகின்றனர்.

ஆனால், தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி எம்.பி., ஆகியோர், முதல்வர் விஜயை, ராகுல் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். த.வெ.க., அமைச்சரவையில், காங்., இடம் பெற்றுள்ளதால், அந்த சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. ஸ்டாலின் உடனான சந்திப்பு, இன்னும் உறுதியாகவில்லை. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ.,வை எதிர்ப்பதில் தி.மு.க., உறுதி


பா.ஜ., எதிர்ப்பில் இன்றளவும் தி.மு.க., உறுதியாக இருக்கிறது. பார்லிமென்டிலும், மக்கள் மன்றத்திலும், தேர்தல் கமிஷனர் விவகாரத்திலும், தி..மு.க., தன் எதிர்ப்பை தெரிவிக்கிறது. பா.ஜ.,வை எதிர்ப்பதில், ஸ்டாலின் துளியளவும் மாறாமல் உறுதியாக இருக்கிறார். சில கட்சி மாதிரி, அப்படி இப்படி எல்லாம் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு பின், பா.ஜ., எதிர்ப்பை, த.வெ.க., சிதைத்து விட்டது. இடைத்தேர்தலுக்கு பின், த.வெ.க., அரசு நீடிக்குமா என்பது எனக்கு தெரியாது. ஜோதிடம் பார்த்து சொல்ல முடியாது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வருகையை ஒட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் நடக்கும் வசூல் பற்றி, மாநில தலைவரிடம் தான் கேட்க வேண்டும்.


- செல்வப்பெருந்தகை,
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us