'சட்டையை கிழித்து ஸ்டாலின் தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி'
'சட்டையை கிழித்து ஸ்டாலின் தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி'
ADDED : ஏப் 30, 2025 01:36 AM

சென்னை : 'கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி. சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப்பையில் அரிவாள்களே சாட்சி. பெண்கள் பாதுகாப்பின்மைக்கு, அண்ணா பல்கலையே சாட்சி.
போதைப்பொருட்கள் கடத்தலுக்கு, தி.மு.க., அயலக அணியே சாட்சி. போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் தி.மு.க., இளைஞர் அணி கூட்டமே சாட்சி. ஸ்டாலின் மாடல் சமூக அநீதிக்கு வேங்கைவயலே சாட்சி.
ஏற்கனவே, 'ஆப்பரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0' அனைத்துமே தோல்வி. இதில் இன்று, 'வெர்ஷன் 2.0 லோடிங்காம்'.
அ.தி.மு.க., ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழகத்தை, ஜாமினில் வந்தவர்களுக்கு எல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு, முதல்வரே சாட்சி.
வரும் 2026ல் ஒரே வெர்ஷன்தான். அது தமிழ்நாடு அ.தி.மு.க., வெர்ஷன்.
வருகிற சட்டசபை பொதுத்தேர்தலில், மக்கள் பெரிய 'ஓ' போட்டு, 'பை பை ஸ்டாலின்' என்று சொல்லும்போது, ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு, தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

