சிறுநீரக திருட்டு அல்ல; முறைகேடு! சொல்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்
சிறுநீரக திருட்டு அல்ல; முறைகேடு! சொல்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்
ADDED : ஜூலை 26, 2025 03:34 AM

சென்னை: ''சிறுநீரகத்தை தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு; நடந்திருப்பது முறைகேடு,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
விசாரணை இக்குழுவினர், பெரம்பலுாரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதன்படி, இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
தற்போது நடந்திருப்பது சிறுநீரக திருட்டு அல்ல; சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு. இதை புரிந்துகொள்ள வேண்டும். இது திருட்டு அல்ல; முறைகேடு.
நாமக்கல் பகுதியில், 201 9ல் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முதல்வராக இருந்தார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக தான், தற்போது நடந்துள்ளது. இதில், தவறு கண்டறியப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

