ADDED : ஜூன் 04, 2025 02:53 AM

மதுரையில் ஸ்டாலின் நடத்தியது தான் உண்மையான ரோடு ஷோ. ஏனென்றால், அங்கு மக்களே இல்லை. ரோடு தான் இருந்தது. ரோடு முழுக்க மக்களை காசு கொடுத்து கூட்டி வந்து, ஷோ காட்டியுள்ளனர். அதனால், அவர் நடத்தியதுதான் உண்மையான ரோடு ஷோ. இதெல்லாம் மக்கள் தி.மு.க., மீது அதிருப்தியாக இருப்பதன் வெளிப்பாடு.
தேச விரோதமாக பேசுவதை தி.மு.க.,வினர் வீரம் என நினைத்துக்கொண்டு பேசுகின்றனர்.
மத்தியில் 2004--14ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது. அப்போது, 32 சதவீதமாக இருந்த மாநில அரசுக்கான மத்திய அரசின் நிதி பகிர்மானம், தற்போது 42ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், மத்திய அரசை குறை சொல்கின்றனர்.
ஊழலுடன் சமரசம் செய்ய மாட்டேன் என கட்சி துவக்கி, புரட்சி செய்ய வந்த நடிகர் கமல், தற்போது, சூரியனுக்குள் டார்ச் லைட்டை தொலைத்து விட்டார். ஊழலோடு ஊழலாக கரைந்து விட்டார். விரைவில், மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தி.மு.க.,வோடு இணைத்து விடுவார்.
- ராஜா,
மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,