sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காஞ்சி மஹா ஸ்வாமிகள் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்

/

காஞ்சி மஹா ஸ்வாமிகள் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்

காஞ்சி மஹா ஸ்வாமிகள் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம்

2


ADDED : டிச 28, 2024 06:51 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:51 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ஸ்வாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் காஞ்சிபுரம் சங்கரமடத்தில், கடந்த 25ம் தேதி துவங்கியது.

பஞ்சரத்த கீர்த்தனை


இதில், மஹா ஸ்வாமிகளின் ஆராதனை தினமான நேற்று காலை 7:00 மணிக்கு, மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனம் முன் ருத்ர பாராயணம், பூஜை, ஹோமம், பஞ்சரத்த கீர்த்தனைகள் உள்ளிட்டவை நடந்தன.

மதியம் 1:00 மணிக்கு பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், மஹா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

இரவு தங்கத்தேரில் எழுந்தருளிய மஹா ஸ்வாமிகள், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வந்தார். மாலை ஸ்ரீமதி விசாகா ஹரி எழுதிய சங்கீத சவுஜன்யம் பேதமில்லாத நாதம் எனும் நுாலை, விஜயேந்திரர் வெளியிட, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் விஜயேந்திரர் பேசியதாவது:

மகாபெரியவர் ஆராதனை விழா சிறப்பாக நடந்தது.

தர்மத்தை பற்றி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தும் முயற்சியில், ஆந்திர மாநிலத்தில் மூன்று பேர் சேர்ந்து பாரதத்தை எழுதினர். கிட்டத்தட்ட 22,000 பாட்டுகள் தெலுங்கில் எழுதினர். அதை எழுதி, 1,000 ஆண்டுகள் ஆகிறது.

மஹாபெரியவர் ஆராதனை ஒட்டி, கடந்தாண்டு 150 இடங்களில் வியாசபாரதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று, 400 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசு வழிகாட்டுதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜன., 8ம் தேதியன்று, வியாசபாரதம் நடைபெற உள்ளது.

மஹாபெரியவரிடம், மன்மோகன்சிங் மரியாதையாக இருக்க கூடியவர். மன்மோகன் சிங் பிரதமர் ஆவதற்கு முன், மயிலாப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது, வெங்கட்ராமன், 'பிரமதர் பதவிக்கு மன்மோகன் சிங் கெட்டிக்காரராகவும், நாணயமானவராக இருக்கிறார்' என்றார். மஹாபெரியவர் பங்கேற்ற சபையில், இவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என, வெளிப்படையாக சொல்லி, பத்திரிகையில் வெளியானது.

பதவி ஏற்கும் முன்பாகவும், அவர் பெயர் சொல்லப்பட்டு, பஞ்சாங்கம் பார்த்து, அவரது செயலருக்கு பதவி ஏற்பு நாள் குறித்து இங்கிருந்து சொல்லப்பட்டது. ஒரு நாள் கழித்து பிரதமர் பதவி ஏற்பது நல்லது என்றோம். அவரும், ஒரு நாள் கழித்து பதவி ஏற்று, 10 ஆண்டுகள் பதவி வகித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா சார்பில், காஞ்சி மஹாபெரியவரின் ஆராதனை விழா, நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது. பிரபல இசை கலைஞர் விசாஹா ஹரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‛சங்கரா சங்கரமும்' என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நிகழ்ச்சியில், விசாஹா ஹரி பேசியதாவது:சிவனின் அம்சங்களாக, இந்த மடாதிபதிகள் உள்ளனர்.ஆதி சங்கரர் தனது, 32 வயதில் அனைத்து ஞானத்தையும் பெற்றார். ஒவ்வொருவரும், சனாதானம் குறித்து அறிந்திருக்க வேண்டும். பாரத கலாசாரத்தை அறிந்துக் கொள்வதற்கு, இலக்கியம், சமயம் ஆகிய நுால்களை கற்றிருக்க வேண்டும். நீங்கள், எந்த துறையில் இருந்தாலும், நம் கலாசாரம், பாரம்பரியத்தை கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் சாட்டர்டு அக்கவுண்ட் முடித்திருந்தாலும், நம் பாரத கலாசாரத்தை கடைப்பிடித்து வருகிறேன். அதேபோல், நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us