தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கொண்டாடுவோம் 'போன் ப்ரீ' தீபாவளி!

கொண்டாடுவோம் 'போன் ப்ரீ' தீபாவளி!

கொண்டாடுவோம் 'போன் ப்ரீ' தீபாவளி!


UPDATED : அக் 31, 2024 01:00 AM

ADDED : அக் 30, 2024 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2024 01:00 AM ADDED : அக் 30, 2024 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எளிமையாக்கிவிட்டது. மொபைல் போன்களின்றி சிலமணி நேரம் இருப்பது கஷ்டம்தான். ஆனால், உறவுகள் இணைந்து கொண்டாடும் இன்றைய பண்டிகையின்போதாவது, இந்த 'கேட்ஜட்டுகளை' ஒதுக்கி வைக்கலாமே!

தீபாவளியை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து, கலந்து பேசி மகிழ்ந்திட இது ஒரு வாய்ப்பு.

வழக்கமான நாட்களில், ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வசித்தாலும், ஆளுக்கு ஒரு மொபைல் போனுடன் பொழுதை கழிப்பதே, இன்றைய மனித வாழ்வின் சாபக்கேடாக மாறி விட்டது.

யாராவது உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் கூட, செயற்கையாக சிரித்து, அளவோடு பேசி, மீண்டும் மொபைல் போனிலும், 'டிவி' நிகழ்ச்சிகளிலும் மூழ்குவதே, இளைய தலைமுறையினரின் வழக்கமாகி விட்டது.

இந்த வழக்கத்துக்கு, இந்த விடுமுறை நாட்களிலாவது முடிவு கட்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பரஸ்பரம் வாய் விட்டு பேசி, உண்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது கோவில், சுற்றுலா தலங்களுக்கு, உறவினர், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று வரலாம்.

மகிழ்ச்சியான கொண்டாட்டம், ஒன்றாக சாப்பாடு, அரட்டை என 'கேட்ஜட் இல்லா தீபாவளியாக' கொண்டாடலாம். ஒவ்வொரு பண்டிகை விடுமுறை நாட்களிலும், இதை பின்பற்றலாம்.

* கேட்ஜட்டுகளை எடுக்கக்கூடாது என முடிவு செய்த பின், குடும்பத்தினர் ஒவ்வொருவர் பயன்படுத்தும் கேட்ஜட்டுகளின் பட்டியலை தயாரிக்கவும். போன், டேப் உட்பட அனைத்து கேட்ஜட்டுகளையும் ஒரே இடத்தில், எளிதில் எடுக்க முடியாதவாறு பாதுகாக்கலாம்.

* போன்கள், கேட்ஜட்டுகள் பயன்படுத்தக்கூடாது என்பதை குழந்தைகள், இளையவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். முக்கியம் மற்றும் அவசியமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்கலாம்.

* இன்ஸ்டா, பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலிருந்து வரும் தொடர்ச்சியான நோட்டிபிகேஷன், நிச்சயம் கவனத்தை சிதறடிக்கும். தீபாவளி கொண்டாட்டம் முடியும் வரை, இந்த சமூக ஊடகங்களின் நோட்டிபிகேஷனை துண்டித்து வைக்கலாம்.

* போனில் குழந்தைகளின் கவனம் குவிவதை தவிர்க்க, வீடு அலங்கரிப்பு, உணவு தயாரிப்பு, உறவினர் கவனிப்பு...உள்ளிட்ட எல்லா பணிகளிலும் அவர்களை ஈடுபடுத்தலாம். குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.

* கேட்ஜட் இல்லாமல் இருப்பதற்கு, குடும்பத்தினருடன் ஜாலியாக எங்காவது 'அவுட்டிங்' போவது சிறந்த வழி. மாலை அல்லது இரவு நேரத்தில், குடும்பமாக சேர்ந்து படம் பார்க்கலாம். இரவு நேரத்தில் மொட்டை மாடியில், குடும்பமாக சேர்ந்து அரட்டை அடித்து மகிழலாம்.

இப்படி அவ்வப்போது கேட்ஜட்கள் இல்லாமல் இருப்பதன் வாயிலாக, நிகழ்கால தருணங்களை ரசிக்கலாம். வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை உணரலாம். மறக்க முடியாத பொக்கிஷமாக, அந்த நினைவுகளை மனதில் தேக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us