sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சேர்ந்து சிரிப்போம்; சேர்ந்து நடப்போம் உலக மேடையிலே...

/

சேர்ந்து சிரிப்போம்; சேர்ந்து நடப்போம் உலக மேடையிலே...

சேர்ந்து சிரிப்போம்; சேர்ந்து நடப்போம் உலக மேடையிலே...

சேர்ந்து சிரிப்போம்; சேர்ந்து நடப்போம் உலக மேடையிலே...


ADDED : ஜன 16, 2025 05:04 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் பதின் பருவத்தில் முதன் முதலாக இந்தியா வந்தேன். இந்த நாடு இந்த அளவுக்கு என் இதயத்தைக் கவரும் என்று, அப்போது நான் நினைக்கவே இல்லை. இன்று அமெரிக்க துாதராக என் பணியை நிறைவு செய்யும் தருணத்தில், இந்தியாவிடம் நான் கற்றுக் கொண்டவைக்காக நன்றியாலும், நமக்காகவும், நம் பூமிக்காகவும், நாம் இணைந்து செயல்பட்டு அடையப்போகும் அமைதியையும், வளத்தையும் எண்ணி நம்பிக்கையாலும் என் இதயத்தை நிரப்பி உள்ளேன்.

மும்பையின் பரபரப்பான வீதிகள் முதல் கோல்கட்டாவின் கலாசார மையங்கள் வரை, இமயமலை மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் அடிவாரம் முதல், இந்தியாவின் தெற்கு முனையான கன்னியாகுமரி வரை என, இந்த மாபெரும் தேசத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பாக்கியத்தைப் பெற்றேன்.

இந்தியாவில், நான் நிறைய கற்றுக்கொண்ட போதிலும், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட்டால், சிறந்த சாதனைகளை செய்யலாம் என்பதே என் முக்கிய புரிதலாகும். எண்களில் இது தெளிவாகத் தெரிகிறது.

ஏறத்தாழ, 200 பில்லியன் டாலர் இருவழி வர்த்தகம், அமெரிக்காவை இந்தியாவின் மிகப்பெரிய வணிக பங்குதாரராக மாற்றியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மற்ற எல்லா நாட்டு மாணவர்களையும் விட அதிகமாக, 3,00,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்கின்றனர்; தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 10 லட்சம் குடியேற்றமற்ற விசாக்களை இந்தியர்களுக்கு வழங்கிஉள்ளோம்.

நம் பூமியை பாதுகாக்க, 92.5 பில்லியன் டாலர் பருவநிலை நிதி மற்றும் இந்தியாவில், 4.5 கோடிக்கு அதிகமான மக்களுக்கு பயனளிக்கும் வகையில், 90க்கும் மேற்பட்ட சுகாதார புத்தாக்கங்களுக்காக நாம் இணைந்துள்ளோம். இந்த எண்கள் மகத்தானவை என்றாலும், நமது அற்புதமான பயணத்தில் இவை ஒரு பகுதி மட்டுமே.

அமைதி, வளம், பூமி


இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நான் வந்த போது, நம் கூட்டுப் பணியின் பரந்த நோக்கத்தால் வியப்படைந்தேன். தொழில்நுட்பம், வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான இந்தோ- - பசிபிக் என, கடலின் அடிப்பகுதி முதல் விண்வெளி வரை இந்தியர்களும், அமெரிக்கர்களும் இணைந்து பணியாற்றும் துறைகள் நான் நினைத்ததை விட அதிகமாக இருந்தன. 'Four Ps' என்று நான் அழைக்கும், நம் அமைதி, வளம், பூமி மற்றும் மக்கள் ஆகியவற்றின் மூலம், நாம் எவ்வாறு ஒரு சிறந்த உலகத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் உருவாக்குகிறோம் என்பதை நேரடியாக கண்டேன்.

முதல் பயணமாக ஆமதாபாத் சென்ற போது, பெண்கள் தலைமையில் இயங்கும் முக்கிய அமைப்பான சேவா-வின் தலைவர்களை சந்தித்தேன்.பருவநிலை சிக்கல் உலகளாவிய துரித நடவடிக்கைக்கு காத்திருக்கிறது என்பதை, அவர்களின் கதைகள் நினைவூட்டுகின்றன.

ஒரு இந்திய உற்பத்தியாளர், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக, புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் உருவான மலேரியா தடுப்பூசியின் முதல் தொகுப்பு, மத்திய ஆப்ரிக்க குடியரசிற்கு வழங்குவதற்காக லாரிகளில் ஏற்றப்படும் காட்சியை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

முக்கிய உச்சி மாநாடுகளில் திறமையான இந்திய வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் பிரதிநிதிகளுடன் உரையாடியதையும், 'செலக்ட் யு.எஸ்.ஏ.,' மாநாட்டில் இதுவரை இல்லாத அளவில், இந்திய பிரதிநிதிகள் அமெரிக்காவில், 3.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதை கண்டதையும், அமெரிக்க - -இந்தியா விமானத்துறை மாநாட்டில் தனியார் துறை பங்கேற்பாளர்களை சந்தித்ததையும் (இதில் 150 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க விமான ஆர்டர்கள் மற்றும் ஹரியானாவில் ஒரு விமான மையத்தை உருவாக்குவது உட்பட இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்துத் துறைக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன) பெருமையாக கருதுகிறேன்.

இந்தியாவின் அற்புதமான கலை மற்றும் கலாசாரத்தை நான் நீண்ட காலமாக வியந்து பாராட்டி வருகிறேன். இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து, நமது கலை, வரலாறு மற்றும் கலாசாரத்தை பகிர்ந்து கொள்வதை எளிதாக்கும், அமெரிக்க- - இந்திய கலாசார சொத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் பெருமைப்படுகிறேன்.

கடந்த, 2023ல் மேஜர் லீக் கிரிக்கெட் தொடங்கப்பட்டதில் இருந்து, 2028ல் என் சொந்த ஊரான லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்தது வரை, அமெரிக்காவில் கிரிக்கெட்டின் அபரிதமான வளர்ச்சிக்கு பங்காற்றியதில் மிக்க மகிழ்ச்சி. அமெரிக்கா உடன் இந்தியா என்பதை தாண்டி அமெரிக்காவுக்கு நிகராக இந்தியா என்பதில், நான் எப்போதும் உறுதியாக உள்ளேன். அமெரிக்காவும், இந்தியாவும் முழு மனதுடன் கைகோர்க்கும் போது, பொது நலனுக்காக நம்மால் ஈர்க்க முடியாத நண்பர்களும் இல்லை, திறக்க முடியாத கதவுகளும் இல்லை.

நம்பிக்கையின் பலம்:


சில நேரங்களில், நமக்கு முன்னால் உள்ள தடைகளை, அவற்றுக்கு அப்பால் உள்ள சாத்தியங்களை விட தெளிவாகக் காண்கிறோம். ஆனால், உண்மையில் நாம் பகிர்ந்து கொள்ளும் விழுமியங்கள், நமக்கு இடையே உள்ள வேறுபாடுகளை விட மிக அதிகம். அமெரிக்க‍ - -இந்திய உறவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை என் மனதில் நிரம்பி இருக்கிறது.

மக்களை பாதுகாப்பதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், உலகெங்கிலும் உள்ள ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிப்பது போன்ற சவால்களை நாம் இணைந்து சந்திப்பது எளிதாக இருக்கும்.

'நிகழ்காலத்தில் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்து, நம் எதிர்காலம் அமைகிறது' என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் பற்றிய நம் பொதுவான லட்சியத்தால் வழிநடத்தப்பட்டு, கைகோர்த்து தொடர்ந்து செயல்படுவோம். உங்கள் அரவணைப்பு, உங்கள் ஞானம் மற்றும் உங்கள் அசைக்க முடியாத நட்புக்கு நன்றி, இந்தியா. இந்த அற்புத தேசத்திற்கான அமெரிக்க துாதராக பணியாற்றியது என் வாழ்நாள் கவுரவம். உங்களை எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன். நன்றி, சென்று வருகிறேன்!






      Dinamalar
      Follow us