'இனி அடிச்சு விளையாடுவோம் பலமான கட்சியாக மாற்றுவோம்': மாணிக்கம் தாகூர்
'இனி அடிச்சு விளையாடுவோம் பலமான கட்சியாக மாற்றுவோம்': மாணிக்கம் தாகூர்
ADDED : ஜூன் 29, 2026 04:26 AM

சென்னை: ''பதவி ஏற்பு விழாவிற்கு எல்லோரும் வாருங்கள்; இனி அடிச்சு விளையாடுவோம். காங்கிரஸ் கட்சியை பலமான கட்சியாக மாற்றுவோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தமிழக காங்., புதிய தலைவராக விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை 4:00 மணிக்கு, கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் பங்கேற்கிறார்.
இதுகுறித்து, மாணிக்கம் தாகூர் வெளியிட்ட 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, இந்த காலத்தில், தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 59 ஆண்டுகளுக்கு பின், காங்கிரசுக்கு, இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஆட்சியில் பங்கு என்பது, நம் லட்சியமாக இருந்தது; அதை அடைந்து விட்டோம்.
ராகுலை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்பதே, அடுத்த லட்சியம். அதற்கு 40 எம்.பி.,க்கள் தமிழகத்திலிருந்து வெற்றி பெற வேண்டும். அதுதான் நம் லட்சியமாக இருக்க வேண்டும்.
அதற்கு பலமான கூட்டணி, நம்மிடம் இருக்கிறது. அந்த கூட்டணியுடன், மக்களிடம் செல்வது, மிக மிக அவசியமானது. மிகுந்த நம்பிக்கையோடு, நம் தொடக்கம் இருக்கும். அடிச்சு விளையாடுவோம்; நம்பிக்கையோடு இருப்போம். காங்கிரஸ் கட்சியை, பலமான கட்சியாக மாற்றுவோம். ஒரு பலமான காங்கிரஸ் கட்சியை உருவாக்க, தலைவர்கள், தொண்டர்கள் அனைவரின் ஆதரவும் தேவை. பதவி ஏற்பு விழாவிற்கு எல்லோரும் வாருங்கள்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
