தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ராகுலிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்..: அந்துமணி பதில்கள்

ராகுலிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்..: அந்துமணி பதில்கள்

ராகுலிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்..: அந்துமணி பதில்கள்

11


UPDATED : அக் 01, 2026 05:18 AM

ADDED : அக் 01, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

11

UPDATED : அக் 01, 2026 05:18 AM ADDED : அக் 01, 2026 05:17 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரா.தீனதயாளன், விழுப்புரம்:


நுாறு சதவீதம் எத்தனாலில் இயங்கும் கார், இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது குறித்து?



சோளதட்டை போன்ற உள்நாட்டு மூலபொருட்களால் எத்தனால் தயாரிக்கப்படுவதால், நாம் எரிபொருட்களுக்கு வேறு நாட்டை கையேந்த வேண்டி இருக்காது. 'ஆல் த பெஸ்ட்' நிதின் கட்கரி!

க.அருச்சுனன், செங்கல்பட்டு:


அமைச்சர் வருகிறார் என்றாலே, 'போஸ்டர், பிளெக்ஸ் பேனர்' வைக்கும் காலத்தில், 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' துவக்க, மதுரை வந்த முதல்வர் விஜய்க்கு, எந்த போஸ்டரும், பேனரும் இல்லை என்பது பாராட்டத்தக்கது தானே?



போஸ்டர், பேனர்கள் வைக்கும் செலவில், இன்னும் அதிக நலத் திட்டங்களை செயல்படுத்தலாமே... மேலும், பேனர்கள் பொதுமக்கள் மேல் சரிந்து விழும் அபாயமும் தவிர்க்கப்படும் அல்லவா!

என்.ஏ.நாகசுந்தரம், கன்னியாகுமரி:


'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; முழு வலிமையுடன் பாதுகாப்போம்' என, ராகுல் அழைக்கிறாரே?



முதலில் இவரிடமிருந்து, இந்தியாவை நாமெல்லாம் பாதுகாப்போம் நாகசுந்தரம்!

மு.மதிவாணன், தர்மபுரி:


'அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதால், 1 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு, 685 கோடி ரூபாய் மிச்சமாகும்' என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளாரே?



ஒரு லட்சம் கர்ப்பிணிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கும் விதமாக, மருத்துவ மனைகளின் கட்டமைப்பும், பயிற்சி பெற்ற மருத்துவர்களும் வேண்டும். சுகாதாரமான சூழ்நிலை இருந்தால், அரசு மருத்துவ மனைகளுக்கு தாமாகவே மக்கள் வருவரே!

க.பெரியசாமி, மதுரை:


கடந்த தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டே இல்லை; இப்போது மட்டும் மின்வெட்டு இருப்பது ஏன்?

Image 1624822தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டே இல்லையா... அப்போது அந்த, 'அணில்' கதையெல்லாம் எதற்காக சொல்லப்பட்டது?

மு.தெய்வானை, பழனி:


ஓட்டு சீட்டு முறையை தேர்தலில் மீண்டும் கொண்டு வர வேண்டுமென சிலர் குரல் கொடுக்கின்றனரே?



'ஆகாத நபர் கால் பட்டால் குத்தம்; கை பட்டால் குத்தம்' என்ற மனப்பான்மையில் , சிலர் சொல்லும், 'அறிவார்ந்த' யோசனைகளில் இதுவும் ஒன்று. தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்க மறுக்கும் இவர்களை, எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் இளைஞர்கள் ஒதுக்கி விடுவர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us