அண்ணனை போல கனிமொழியும் தன் பெயரை மாற்றிக் கொண்டு விட்டார்..: அந்துமணி பதில்கள்
அண்ணனை போல கனிமொழியும் தன் பெயரை மாற்றிக் கொண்டு விட்டார்..: அந்துமணி பதில்கள்
UPDATED : செப் 23, 2026 06:07 AM
ADDED : செப் 23, 2026 04:43 AM

'நாங்கள் அவ்வளவு உஷாராக, 'விஞ்ஞான ஊழல்' தான் செய்வோம்' என, கூறுகிறாரோ!
தவறில்லையே... செவி வழியாக இன்னும் பலருக்கு உண்மை தகவல் போய் சேருமே. அதுவே ஒரு பொதுத்தொண்டு தான்!
'இந்தியாவில் படித்து, இந்தியாவிற்கே நம் மூளையும், உழைப்பும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்' என்று, நம் பிரதமர் மோடி கூறுகிறாரே... புரியவில்லையா பாபு?
விலைவாசி உயர்வது ஒரு பக்கம், மக்கள் மீண்டும் பணப் பரிவர்த்தனை செய்வதை அதிகரிப்பர். 'பிக்பாக்கெட்' திருடர்களுக்கும், வழிப்பறி திருடர்களுக்கும் கொண்டாட்டமாக போகும்!
தன் அண்ணன் ஸ்டாலின், 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என, 'கெத்தாக' தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளது போல, கனிமொழியும் தன் பெயரை மாற்றிக் கொண்டு விட்டார் போலும்!
இப்படி, 'சின்ன மீனில்' ஆரம்பித்து, நடவடிக்கை எடுப்பது சரியே! ஆனால், 'திமிங்கிலங்களை' கொண்டு வரச் சொல்பவர்களையும் பிடிக்க வேண்டும்!
அஜித் தோவல், இந்தியாவின் மூளை என சொல்லலாம். தேசத்தின் பாதுகாப்பு மட்டுமே அவரது சிந்தனை. அவர் போன்றோர் நம் நாட்டின் உயர் பொறுப்புகளில் உள்ள வரை, இந்தியா மிளிரும்.
