UPDATED : ஜன 24, 2024 04:43 AM
ADDED : ஜன 23, 2024 11:15 PM

நாற்பது தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளுடன் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசிக்க உள்ளது. இதற்கான கூட்டங்கள், இன்று துவங்கி அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடக்கின்றன.
தி.மு.க. நிர்வாகி கூறியதாவது: கட்சியினரிடம் காணப்படும் கோஷ்டி பூசலையும், அதிருப்தியையும் போக்கி, அவர்களை தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும். மாவட்டச்செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இடையிலான மோதல்களை சரி செய்து, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வைக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், கட்சி நிர்வாகிளுக்கும் இடையிலான மனக்கசப்புகளை சரி செய்ய வேண்டும். எதிரணிக்கு ஆதரவாக உள்குத்து வேலையில் ஈடுபடாமல், வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு, நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்காக, 40 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து,ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
அவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து கருத்துக்கள் கேட்கவும், ஒருங்கிணைப்பு குழு முடிவெடுத்துள்ளது. அதற்காக, 12 நாட்கள் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

