மகாவிஷ்ணு விவகாரம்: உண்மை கண்டறிய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மகாவிஷ்ணு விவகாரம்: உண்மை கண்டறிய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : செப் 09, 2024 04:47 AM

மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய விவகாரத்தில் நடந்த விபரங்களை, ரகசியமாக ஆராய்ந்து அறிக்கை தர, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் மகேஷ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அனுமதியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பலிகடா ஆக்கப்பட்டது, அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அசோக்நகர் பள்ளிக்கு தொடர்பில்லாத ஆசிரியர்கள், அங்கு வந்து கேள்வி எழுப்பியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக, உளவுத்துறை அறிக்கை தயாரித்து, அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளது. இருப்பினும், தன் செயலர்கள் வாயிலாக, இப்பிரச்னையின் ஆரம்பம் முதல் நடந்துள்ள விபரங்களை சேகரித்து அனுப்ப, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை முக்கிய அதிகாரி ஒருவரை, முதல்வரின் செயலர் ஒருவர் அழைத்து, ரகசிய விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பின், தலைமை செயலருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து பல மாற்றங்கள் இருக்கும் என, தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.