தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகளால் கிளம்பியது சர்ச்சை

உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகளால் கிளம்பியது சர்ச்சை

உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு? வண்ண குறியீடுகளால் கிளம்பியது சர்ச்சை

5


ADDED : ஜூன் 29, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 07:47 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அரசு கல்லுாரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வில், ஆங்கில பாடத் தேர்வு முடிவுகளில், தேர்வர்களை அடையாளப்படுத்த, வண்ண குறியீடுகள் இருப்பதாக புகார் எழுந்து உள்ளது.

குளறுபடி


தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 8,000க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2,708 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு வெளியிட்டது. தேர்வுக்கு, 47,047 பேர், விண்ணப்பித்தனர். டிசம்பர் 27ல் தேர்வு நடந்தது. 42,064 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள், கடந்த 25ம் தேதி வெளியானது.

இவற்றில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக, கவுரவ விரிவுரையாளர்களும், தேர்வர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். 'தாள் 2ல், ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண்கள் வீதம், ஐந்து கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள் இடம் பெற்றன. 'அதில், சிலருக்கு 49 மதிப்பெண், சிலருக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பணி மூப்பில் முன்னிலையில் இருப்பவர்களுக்கு, ஒற்றை இலக்க மதிப்பெண்களே வழங்கப்பட்டு உள்ளன' என, குற்றச்சாட்டு எழுந்தது.

அடையாளம்

அதைத் தொடர்ந்து, உதவி பேராசிரியர் தேர்வு முடிவில், அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆங்கில பாடத் தேர்வு முடிவில், சில தேர்வர்களின் மதிப்பெண்கள், மஞ்சள், நீலம் உட்பட பல வண்ணங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரகசிய குறியீடுகள் ஏன் என, தேர்வர்கள், கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த தேர்வை ரத்து செய்து, முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்லுாரி கல்வி கமிஷனர் ஆகியோரை இன்று சந்தித்து மனு அளிக்க உள்ளதாக, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின், மாநில தலைவர் தங்கராஜ் அறிவித்துள்ளார்.

விசாரணை வேண்டும்!
உதவி பேராசிரியர் தேர்வு முடிவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மதிப்பீட்டு அளவுகோல், மாதிரி விடைகள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவற்றை, தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதால், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தேர்வு முடிவை ரத்து செய்து, விசாரணை நடத்தி, தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - பழனிசாமி பொதுச் செயலர், அ.தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us