sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மேட்டூர் அணைக்கு 90 வது 'பர்த்டே!'

/

மேட்டூர் அணைக்கு 90 வது 'பர்த்டே!'

மேட்டூர் அணைக்கு 90 வது 'பர்த்டே!'

மேட்டூர் அணைக்கு 90 வது 'பர்த்டே!'

3


UPDATED : ஆக 21, 2024 03:26 AM

ADDED : ஆக 21, 2024 02:49 AM

Google News

UPDATED : ஆக 21, 2024 03:26 AM ADDED : ஆக 21, 2024 02:49 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் குடகு மாவட்டம் தலைகாவிரியில் உருவாகும் காவிரியாறு, 20க்கும் மேற்பட்ட துணையாறுகளுடன் கலந்து, அகன்ற காவிரியாக உருவாகி, கர்நாடகா, தமிழகத்தில், 748 கி.மீ., பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

மேட்டூர் அணை கட்டுவதற்கு முன், அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, டெல்டா மாவட்ட கிராமங்களில் நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன.

4.80 கோடி ரூபாய்


அதை தடுக்க, காவிரி குறுக்கே அணை கட்ட, அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்கான ஆய்வு, 1834 முதல், 1924 வரை, 90 ஆண்டுகள் நடந்தன.

இறுதியாக அணை கட்ட, மேட்டூர் தேர்வு செய்யப்பட்டு, 1925 ஜூலை, 20ல் கட்டுமானப்பணி தொடங்கியது.

கண்காணிப்பு, வடிவமைப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ், நிர்வாக பொறியாளர் வெங்கட்ராம அய்யர், முதன்மை தலைமை பொறியாளர் முல்லிங்க்ஸ் அடங்கிய, 24 பொறியாளர் குழுவினருடன், பல ஆயிரம் தொழிலாளர்கள், கட்டுமானப்பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 1934 ஜூலை, 14ல் கடைசி கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து முதல்முறை பாசனத்துக்கு, அதே ஆண்டு ஜூன், 12ல் நீர் திறக்கப்பட்டது.பின், 1934 ஆக., 21ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு, 4.80 கோடி ரூபாய் செலவானது.

சென்னை மாகாண கவர்னர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி, 1934 ஆக., 21ல் பாசனத்துக்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவரது நினைவாக, அணைக்கு, ஸ்டான்லி அணை என பெயர் சூட்டப்பட்டது.

மின்னல்


அணை கட்டுமான பணி முடிந்த நிலையில் இதுவரை, 1947, 1999, 2015 ஆண்டுகளில், அணையின் மேற்பகுதியில் மின்னல் தாக்கியுள்ளது; எனினும் சேதம் ஏற்படவில்லை.

அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன், 12 முதல் ஜன., 28 வரை பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம், 13 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். நடப்பாண்டு கடந்த, 30ல் மேட்டூர் அணை, 43ம் முறை நிரம்பியது.

தற்போது நீர்மட்டம், 120 அடியில் நீடிக்கிறது. அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து, இன்றுடன், 90 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் மேட்டூர் அணை, நாளை, 91ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.






      Dinamalar
      Follow us