sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 ஒரே வேலைக்கு பலரிடம் வசூல்: அதிர்ச்சியில் அமைச்சர்

/

 ஒரே வேலைக்கு பலரிடம் வசூல்: அதிர்ச்சியில் அமைச்சர்

 ஒரே வேலைக்கு பலரிடம் வசூல்: அதிர்ச்சியில் அமைச்சர்

 ஒரே வேலைக்கு பலரிடம் வசூல்: அதிர்ச்சியில் அமைச்சர்

5


UPDATED : பிப் 11, 2026 05:27 AM

ADDED : பிப் 11, 2026 04:15 AM

Google News

5

UPDATED : பிப் 11, 2026 05:27 AM ADDED : பிப் 11, 2026 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள 109 பணியிடங்களை நிரப்ப, 10,500 பேரிடம் நேர் காணல் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியினர் இந்த பணியிடங்களுக்கு 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரை வசூலில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால், அனைத்து நாட்களிலும் கோவிலில் கூட்டம் உள்ளது. இதை சமாளிக்க, புதிய பணியிடங்கள் உருவாக்க அறநிலையத்துறை அனுமதித்துள்ளது.

அதன்படி, 70 காவலர் பணியிடங்கள் உட்பட மொத்தம் 109 பணியிடங்களுக்கு, 2025 பிப்., மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மாதம் 13,000 முதல் 25,000 ரூபாய் வரை சம்பளம் உள்ள இந்த பணியிடங்களுக்கு, 10,500 பேர் விண்ணப்பித்தனர். கடந்த பிப்., 2ம் தேதி முதல் இவர்களுக்கான நேர்காணல் நடந்து வருகிறது.

இதற்கிடையே, இதில் சிபாரிசு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தேர்தல் நெருங்கி வருவதால், சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை 'கவனிக்கும்' வகையில், அவரவர் தகுதிக்கேற்ப எண்ணிக்கையில், பணியிடங்களை 'பரிந்துரைக்காக' பிரித்து கொடுத்துள்ளார் மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேலு.

அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களின் பெயர்களை, இறுதி பட்டியலாக தொகுத்து, அமைச்சர் வேலு வழங்குவார். அதன்படி பணி நியமன ஆணைகளை வழங்க ஏற்பாடாகி உள்ளது.

இதில், ஒதுக்கீடு பெற்ற நிர்வாகிகள், பணியிடத்திற்கு தலா 8 முதல் 12 லட்சம் ரூபாய் பெற்று வருகின்றனர். அது மட்டுமல்லாமல், தாங்கள் பெற்ற ஒவ்வொரு பணியிடத்திற்கும் 3- 4 பேரிடம் வசூல் செய்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ஒதுக்கீடு ஏதும் பெறாத நிர்வாகிகளும், இச்சூழலை பயன்படுத்தி வசூல் நடத்தி வருகின்றனர். இந்த தகவல் தெரிந்த அமைச்சர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, 10,500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 109 பேருக்கு மட்டும் பணி வழங்கினால், வாய்ப்பு கிடைக்காத மற்றவர்கள், தங்களுக்கு எதிரான மனநிலைக்கு வரக்கூடும் என்பதால், தற்போதைக்கு நேர்முக தேர்வு மட்டும் நடத்தி, தேர்தலுக்கு பின் பணி ஆணை வழங்க, அமைச்சர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கட்சி நிர்வாகிகளோ, ஆட்சி மாற்றம் எதுவும் நடந்துவிட்டால், பணி நியமனத்திற்கு பணம் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதால், உடனே பணி நியமனம் வழங்க வேண்டும் என, அமைச்சருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இந்த குழப்பத்திற்கு இடையே, தேர்தலை காரணம் காட்டி, யார் மூலமாவது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து, பணி நியமனத்திற்கு தடை உத்தரவு பெற்று, காலம் கடத்தவும் யோசனை நடந்து வருகிறது. இதனால், கட்சி நிர்வாகிகளும், பணம் கொடுத்துவிட்டு பணிக்காக காத்திருப்போரும் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us