நேரு கோட்டை விட்டதை மோடி சரி செய்துள்ளார்: மதுரை ஆதீனம்
நேரு கோட்டை விட்டதை மோடி சரி செய்துள்ளார்: மதுரை ஆதீனம்
ADDED : நவ 10, 2024 01:40 AM

அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பின், உலகளவில் பல்வேறு மாற்றங்கள் உருவாகும் என கணிக்கப்படுகிறது.
இந்திய நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிஞர்கள் பெயரில் பலரும் கூறுகின்றனர். இந்திய பொருளாதாரம் யாராலும் வீழ்ச்சி அடையாது. பிரதமர் மோடி, இந்திய பொருளாதார சரிவை தடுத்து நிறுத்தி விடுவார்.
பிரதமர் மோடியின் செயல்பாடுகளால், இந்தியாவை சீண்டிக் கொண்டிருந்த சீனாவே தற்போது குறைத்துள்ளது. இதன் வாயிலாக, பிரதமராக இருந்த நேரு ஏற்கனவே கோட்டை விட்டதை, பிரதமர் மோடி தற்போது சரி செய்து இருக்கிறார்.
உலகளவில் இந்தியாவின் மரியாதையும் முக்கியத்துவமும் பல நாடுகளுக்கு தற்போது உணர்த்தப்பட்டுள்ளது.
உதயநிதி தமிழக துணை முதல்வராக நியமிக்கப்பட்டது முதல்வரின் இஷ்டம். கருணாநிதி பேரன், முதல்வரின் மகன் என்ற வகையில் முன்னுரிமை கொடுத்துக்கூட நியமித்திருக்கலாம். அப்படி நியமிக்கப்பட்டிருந்தாலும், அதில் தவறில்லை.
-ஹரிஹர தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள்,
மதுரை ஆதீனம்