sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 அதிக தொகுதி; அமைச்சரவையில் இடம்: காங்., - எம்.எல்.ஏ., மீண்டும் அடம்

/

 அதிக தொகுதி; அமைச்சரவையில் இடம்: காங்., - எம்.எல்.ஏ., மீண்டும் அடம்

 அதிக தொகுதி; அமைச்சரவையில் இடம்: காங்., - எம்.எல்.ஏ., மீண்டும் அடம்

 அதிக தொகுதி; அமைச்சரவையில் இடம்: காங்., - எம்.எல்.ஏ., மீண்டும் அடம்

10


ADDED : நவ 27, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:36 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கலந்து கொண்ட கூட்டத்தில், 'தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகள், அமைச்சரவையில் இடம் கேட்போம்,' என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., பேசினார்.

கன்னியாகுமரி மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட் மற்றும் கட்சியின் மேலிட பார்வையாளர் அனில் போஸ் பங்கேற்றனர். கூட்டத்தில், ராஜேஷ்குமார் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ராகுல் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகள் தவிர எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ளது என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்போம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்போது, அமைச்சரவையிலும் காங்கிரசுக்கு இடம் கேட்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீர்த்திருத்த பணியில், அதிக கவனம் செலுத்தி, ஒரு காங்கிரஸ் தொண்டருடைய ஓட்டு கூட விடுபடாமல் பார்க்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us