தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/மிஸ்டர் ஏஐ.. நீங்க நல்லவரா, கெட்டவரா..?

மிஸ்டர் ஏஐ.. நீங்க நல்லவரா, கெட்டவரா..?

மிஸ்டர் ஏஐ.. நீங்க நல்லவரா, கெட்டவரா..?


ADDED : நவ 25, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள உண்மையான நண்பர்கள் கிடைப்பதில்லை என்பதாலும், நாம் சொல்வதை வைத்து மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற தயக்கத்தாலும் பலர் தங்களின் எண்ணங்களையும் கேள்விகளையும் ஏஐயிடம் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால், நாம் விளையாட்டாக பகிரும் தகவல்கள்கூட சேமிக்கப்பட்டு, நம்மை பற்றிய தவறான புரிதல்களை உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் டேட்டா திருட்டுக்கும் வழிவகுக்கலாம் என்ற எச்சரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் துறை பேராசிரியர் சதீஸ்குமார் கூறியதாவது: சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பிராம்ப்ட்டில், ஏற்கனவே நாம் ஏஐயிடம் பேசிய உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு நம்மைத் திட்டுமாறு கேட்கப்படுகிறது. அப்போது நாம் முன்பு பகிர்ந்த தகவல்களை வைத்தே ஏஐ நம்மைக் கிண்டல் செய்கிறது. இது வெறும் பொழுதுபோக்காக தோன்றினாலும், நாம் கேட்கும் கேள்விகளையும் பகிரும் தகவல்களையும் ஏஐ எவ்வாறு புரிந்துகொள்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

Image 1650285


உதாரணமாக, 'திருப்பூரில் இருந்து சீக்கிரம் செல்ல குறுக்கு வழியை கூறு' என்று கேட்டால், கேள்வி கேட்டவரின் சொந்த ஊர் திருப்பூர் என்று ஏஐ தவறாக புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஒரு தகவலை தெரிந்துகொள்வதற்காக கேட்கும் கேள்வியைக்கூட, நம்மை பற்றிய தகவலாக ஏஐ எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய தனிப்பட்ட விவரங்களையும் ஏஐயுடன் பகிர்கிறோம். இத்தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன, எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதில் விழிப்புணர்வு அவசியம். எதிர்காலத்தில் தனிப்பட்ட தரவுகள் தவறாக பயன்படுத்தப்படவோ, விற்பனை செய்யப்படவோ வாய்ப்புகள் உள்ளன.

மனதில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், மன ஆறுதலுக்காகவும் சிலர் ஏஐ பயன்படுத்துகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் அதில் தவறில்லை. ஆனால், ஏஐயிடம் பகிரும் அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பானவை என்று கருதிவிடக்கூடாது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதே ஏஐயின் அடிப்படை பணி என்றாலும், அதன் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தரவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அவசியமாகிறது. ஏஐயை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டுமானால், தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றைப் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

தேவையற்ற அனுமதிகளை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏஐயிடம் ஒரு தகவல் அல்லது கருத்து கேட்டு, அதை பெற்றுக் கொண்டதும், ஏஐ மெமரியில் இருந்து அதை நீக்கி விடும் பழக்கத்தை உருவாக்கி கொள்வது நல்லது. பின்னர் தேவைப்படும் என கருதினால், அதை காப்பி செய்து லோக்கல் டிரைவில் வைத்துக் கொள்ளலாம். ஏஐ ஹிஸ்டரியை அவ்வப்போது டெலீட் செய்வது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us