தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!

மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!

மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!

1


ADDED : ஜூலை 05, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஜூலை 05, 2026 08:27 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இல்லை... நான் 'அப்பா'வைத் தேடினேன்!

எது... 'அப்பா'வா... அதுசரி; 'ஆளும் கட்சியின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லிதான் மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்ற அவசியம் எங்களுக்கு இல்லை. 'இம்மண் அடிமையாகாது காக்கும் ஆற்றல் படைத்த ஒரே படை தி.மு.க.,தான்' என்று நம்பி மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டிருக்கின்றனர்!

'அந்த ஓட்டுகளை பெறுவதற்குரிய அன்பை இன்னும் நாங்கள் இழந்துவிடவில்லை; இழந்துவிடவும் மாட்டோம்! 'உண்மையில் இந்த அரசு தங்களுடைய திட்டவட்டமான கொள்கை எதையும் எந்த பிரச்னையின் மீதும் கவர்னர் உரையில் வெளிப்படுத்தவில்லை' என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்'னு கவர்னர் உரை மீதான விவாதத்துல, மே 6, 1957ல் எதிர்க்கட்சி தலைவரா அண்ணாதுரை பேசினதையும்...

சமீபத்துல சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு பண்ணின விதத்தையும் 'கம்பேர்' பண்ணி, 'ப்ப்ச்ச்ச்... கருத்தை கருத்தால் எதிர்த்த கம்பீர தலைவன் ஆரம்பிச்ச கட்சிய்யா இது'ன்னு இரண்டு வாரமா புலம்பிட்டே சுத்துறாரே உங்க அப்பா... அவரைத்தானே; ஆமா... அவரை ஏன் இப்போ நீ தேடுறே?

ப்ளீஸ்... தயவுசெஞ்சு இடத்தை காலி பண்றியா; நான் எங்க 'அப்பா'வை சொல்லலை!

அப்படியா... அப்போ ஒத்துக்கோ; ஜன்னலுக்கு வெளியே தலைநீட்டி நீ தேடினது என்னைத்தான்னு!

மாட்டேன்; நான் 'அப்பா'வைத்தான் தேடினேன்!

அதான் 'இல்லை'ன்னு இப்போ சொன்... ஓ... எனக்கு புரிஞ்சிருச்சு; நீ அவரைச் சொன்னியா... அதான்...

'தி.மு.க., கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை அகற்ற பல சக்திகள் முயன்றாலும், மு.க.ஸ்டாலின் பக்கபலமாக நிற்கிறார். இதனால், அவரை முழுமையாக நம்புகிறேன். அவர் கருணாநிதியின் பிள்ளை... ஜெயலலிதாவின் வாரிசு'ன்னு 2021 தேர்தல் நேரத்துல சொன்ன திருமாவளவன் இப்படி பண்ணிட்டாரே...'ன்னு இன்னும் புலம்புற எங்க அப்பாவைத் தானே தேடுறே?

யப்பா சாமி... ஆள விடு; நான் ஒத்துக்கிறேன்... நான் உன்னைத்தான் தேடினேன்!

ஆங்... அப்படி வா வழிக்கு; இனி, 'அப்பாவைத் தேடினேன்... ஆட்டுக்குட்டியைத் தேடினேன்'னு எல்லாம் நீ சொல்லக் கூடாது; ஏன்னா... அதை அவர்தான் சொல்வார்... அவர் மட்டும்தான் சொல்வார்.

ஏய்... உண்மையைச் சொல்லு; நீ என்னைத்தானே தேடினே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us