sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முருகேசனும், ஆகாய தோட்டியும்; எளிய பறவையுடன் ஏழையின் பந்தம்

/

முருகேசனும், ஆகாய தோட்டியும்; எளிய பறவையுடன் ஏழையின் பந்தம்

முருகேசனும், ஆகாய தோட்டியும்; எளிய பறவையுடன் ஏழையின் பந்தம்

முருகேசனும், ஆகாய தோட்டியும்; எளிய பறவையுடன் ஏழையின் பந்தம்

14


ADDED : பிப் 11, 2026 07:38 AM

Google News

14

ADDED : பிப் 11, 2026 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேஸ்கோர்ஸ் அப்துல் ரஹீம் ரோடு. குப்பை அள்ளும் வண்டி மீது ராஜதோரணையில் அமர்ந்திருந்தது ஒரு காகம். சதா கத்தியபடியே இருக்க, “இர்றா வர்றேன்.. என்றபடி வந்தார் தூய்மை பணியாளர் முருகேசன்.

சந்தேகம் இல்லை. காகத்தோடு தான் பேசினார். நம்மை கண்டதும் சற்றுத் தயங்கி, பின் பறந்தது காகம்.

“என்னங்க காக்காகூட பேசிட்டு இருக்கீங்க..?:”

“ஆமாங்க. ஆறேழு மாசம் முன்னாடி, என்னோட வண்டி மேல வந்து உக்காந்து கத்துச்சு. மிக்சர் இருந்துச்சு. குடுத்தேன். கொஞ்சம் தயக்கமா கொத்தி சாப்பிட்டுச்சு. அப்புறம், நான் வரும்போதெல்லாம் அ துவும் ஆரம்பிச்சுது. நல்லா பழகிருச்சு. காலைல 9ல இருந்து 11 மணி வரை இந்த பக்கம்தான் வேலை. என்னய பாத்ததும் வந்துரும். மிக்சர், முறுக்குனு கையில வச்சுருந்தா சாப்பிட்டு, தண்ணி குடுத்தா குடிக்கும்.

காக்கி யூனிபார்ம்ல மத்த தூய்மை பணியாளர்கள் வந்து, என் கிட்ட பேசும்போது இது பயப்படாம உக்காந்திருக்கும். வேற யாராவது வந்தா, பறந்துரும். வண்டிய தள்ளிட்டு போகும்போது, கம்பி மேல உக்காந்து சவாரி பண்ணும்..” என்று சுவாரசியமாக விவரித்தார்.

செல்ல பேர் எதாச்சும் வச்சிருக்கீங்களா? அதே காக்கான்னு எப்டி கண்டுபிடிப்பீங்க?

“ஏய்னு தான் கூப்பிடுவேன். அது சாப்பிடும்போது, மூக்குல ஏதாவது சிக்கிட்டா, நாந்தான் எடுத்து விடுவேன். அமைதியா இருக்கும். கண் ஓரத்துல முடி இருக்கும். அது மத்த காக்கால இருந்து தனியா தெரியும். இப்ப இதுக்கு ஒரு குஞ்சு இருக்கு. அதையும் கூட்டிட்டு வரும். குஞ்சு, கீழ இறங்கி வராது.

மரத்துலயோ, சுவத்துலயோ உக்காந்துக்கும். இது என்கிட்ட சாப்பிட்டுட்டு, குஞ்சுக்கும் கொண்டு போகும். குஞ்சுக்காக, மிக்சர் முறுக்க தண்ணில ஊற வச்சு வச்சிருப்பேன். சாப்ட ஈஸியா இருக்கும்ல. அத வாங்கிட்டுப் போய் குஞ்சுக்கு கொடுக்கும்..”

ரொம்ப பாசக்காரர் நீங்க. முன் ஜென்ம பந்தமா?

அதான் நானும் யோசிப்பேன். வேற எங்காவது இருந்தாலும் விசில் அடிச்சா வந்துரும். அப்படி ஒரு பந்தம்ங்க. நம்ம முன்னோர் காக்காவா வருவாங்கனு சொல்வாங்க, இல்ல. அப்பாவோ, அம்மாவோ இப்டி வர்றாங்கனு நான் நினைச்சுக்குவேன்..”

உருகியவர் சுதாரித்து தொடர்ந்தார். காக்கானு இல்லீங்க, வாயில்லா ஜீவனுங்க எது வேணா இருக்கட்டுமே. எல்லா உயிரும் நம்ம சொந்தம் தான. நம்மள விட்டு வேற எங்கங்க போகும். ஒசரத்துல கொஞ்சம் சோறு, ஒரு கப்புல தண்ணி வையுங்க. அதுக பசிய அதுக ஆத்திக்கும். இல்லீங்ளா..”

முருகேசனுடன் பெருமையோடு கைகுலுக்கி விட்டு நாம் கிளம்பியதும், நண்பேண்டா என்பது போல் தன் பாஷையில் கத்திக் கொண்டே முருகேசனின் வண்டி மீது வந்தமர்ந்தார் மிஸ்டர் காகம்.






      Dinamalar
      Follow us