sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கர்நாடகாவில் முடிவுக்கு வருகிறது நக்சல்கள் ஆதிக்கம்

/

கர்நாடகாவில் முடிவுக்கு வருகிறது நக்சல்கள் ஆதிக்கம்

கர்நாடகாவில் முடிவுக்கு வருகிறது நக்சல்கள் ஆதிக்கம்

கர்நாடகாவில் முடிவுக்கு வருகிறது நக்சல்கள் ஆதிக்கம்

1


UPDATED : ஜன 10, 2025 07:22 AM

ADDED : ஜன 10, 2025 07:16 AM

Google News

UPDATED : ஜன 10, 2025 07:22 AM ADDED : ஜன 10, 2025 07:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல தசாப்தங்களாக கர்நாடக அரசுக்கு தலைவலியாக இருந்த, நக்சல்களின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

கர்நாடகாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு நக்சல்கள் முதல்வர் சித்தராமையா முன்பு சரண் அடைந்தனர். இது அரசின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசுக்கு நக்சல்கள் ஆதிக்கம், பல தசாப்தங்களாக தலைவலியாக இருந்தது. தற்போது அந்த ஆதிக்கம் முடிவுக்கு வருவதற்கான வழி பிறந்துள்ளது.

நக்சல் இயக்கம்


கர்நாடகாவில் 1990 முதல் 2012 வரை நக்சல்கள் இயக்கம் உச்சத்தில் இருந்தது. தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு, சிக்கமகளூரு, ஷிவமொக்கா மாவட்டங்களில் அடர்ந்த காடுகளில் 40 முதல் 45 நக்சல்கள் செயல்பட்டு வந்தனர். இது மட்டுமன்றி மாநிலத்தின் வறண்ட பகுதிகள் என்று கூறப்படும் பீதர், ராய்ச்சூர், பல்லாரி, துமகூரு பகுதிகளிலும் நக்சல்கள் நடமாட்டம் இருந்தது.

நக்சல் இயக்கத்தை ஒடுக்க கடந்த 2005ம் ஆண்டில், மாநில அரசு நக்சல் ஒழிப்பு படையை அமைத்தது. இந்த படையில் 15 குழுக்களில், 500 பேர் வரை பணியாற்றினர்.

6 போலீஸ் பலி


கார்கலா ஏடு கிராமத்தில் கடந்த 2005 நவம்பர் 17ம் தேதி நக்சல் ஒழிப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சல்கள் ஹாஜிமா, பார்வதி கொல்லப்பட்டனர். பின், சாகித் ராஜன் என்ற நக்சலும் கொல்லப்பட்டார். இவரது மரணத்திற்கு பழி வாங்கும் வகையில் துமகூரு பாவகடா அருகே வெங்கடமன ஹள்ளியில் போலீஸ் நிலையம் மீது நக்சல்கள் குண்டு வீசியதில், ஆறு போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 2007ல் கொப்பாலில் கவுதம், பரமேஸ்வர், சுந்தரேஷ், ராமேகவுடலு, அவரது மனைவி காவிரி ஆகிய நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2008ல் சொரபாடா மனோகர், அபிலாஷ், நவீன் ஆகியோரும், கடந்த 2010ல் வசந்த் என்பவரும், கடந்த ஆண்டு விக்ரம் கவுடாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெங்கடேஷ், மல்லிகா, ஜெயா, சிரிமனே நாகராஜ், ஸ்ரீதர், பத்மநாபா, பரசுராமன், பாரதி, கன்னியாகுமாரி, சிவா, சென்னம்மா ஆகிய 11 நக்சல்கள் இதற்கு முன் சரணடைந்தனர். தற்போது ஆறு நக்சல்கள் சரணடைந்து உள்ளனர்.

இன்னும் ஒரு நக்சல் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும், அவரையும் சரணடைய வைக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டம்


இவர்கள் அனைவரும் சாதாரண குடிமக்களைப் போல் வாழ முடியுமா; சரணடைந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி தகவல் கிடைத்து உள்ளது.

சரண் அடைந்த ஆறு பேரும் ஊடகங்கள் முன்பு, 'நாங்களாக சரண் அடைந்தோம்' என்று பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். வனப்பகுதியில் நக்சல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்தால் அது பற்றி முழு தகவலையும் கூற வேண்டும்.

தங்களுக்கு தெரிந்த நக்சல்கள் பெயரையும் வெளியிட வேண்டும். நக்சல்களின் அறிக்கையை மாவட்ட சரண் அடைதல் குழு முன்பு வைக்கப்பட வேண்டும். அந்தக் குழு, மாநில அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.

மாத அறிக்கை


சரண் அடைந்தவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் டி.எஸ்.பி., அந்தஸ்துள்ள அதிகாரி ஒருவர் இவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார். அந்த அதிகாரி, சரணடைந்த நக்சல்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, மாதத்திற்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிப்பார்.

அரசு நடவடிக்கை


சரண் அடைந்தவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற நினைத்தால் அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும்.

இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மாநில அரசின் வக்கீல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையின் உண்மை தன்மையை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அனுமதித்தால் சரண் அடைந்தவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us