sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?

/

துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?

துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?

துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?

14


ADDED : நவ 07, 2025 04:45 AM

Google News

14

ADDED : நவ 07, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியது போல், முதன்மை செயலர் நேருவின் மகன் அருண்குமாருக்கு, திருச்சி மத்திய மாவட்ட செயலர் பதவி வழங்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எதிர்காலத்தில் துணை முதல்வர் உதயநிதிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வின் மூத்த மாவட்ட செயலர்கள், மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு, மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் போன்ற முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன.

சமீபத்தில், தி.மு.க., பொதுச்செயலரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கு, வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. துவக்கத்தில் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டு, பின் மாவட்ட செயலர் பதவி வழங்கப்படும்.

இந்நிலையில், தி.மு.க., முதன்மை செயலரும், அமைச்சருமான நேருவின் மகனும், பெரம்பலுார் தொகுதி எம்.பி.,யுமான அருண்குமாருக்கு, மாவட்ட செயலர் பதவி வழங்குமாறு, அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று அருண்குமார் சந்தித்து, தனக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கினால், சட்டசபை தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணியின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


சமீபத்தில், திருச்சி மத்திய மாவட்ட செயலர் வைரமணியை அழைக்காமல், அவர் பெயர் இல்லாமல், லால்குடியில் அருண்குமார் ஆதரவாளர்கள், 'பூத் ஏஜன்ட்' கூட்டத்தை நடத்தினர்.

இதனால், திருச்சியில் நடந்த, 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' ஆலோசனைக் கூட்டத்தில், தன் மனக்குமுறலை வைரமணி வெளிப்படுத்தினார்.

அப்போது, 'மாவட்ட செயலராகிய என் படம், பெயர் இல்லாமல், சில நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை நடத்துவது, எனக்கு வருத்தமாக உள்ளது; வெளியே சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. மாவட்ட செயலர் பதவி பெரிதல்ல. கருப்பு, சிவப்பு வேட்டி கட்டிய இந்த வைரமணி, தி.மு.க.,வுக்கு துரோகம் செய்ய மாட்டான்.

'நான் இறக்கும் போது, என் உடலில் தி.மு.க., கொடியை போர்த்த வேண்டும் என்பது தான் என் ஆசை. கட்சியில் பதவிக்கு தான் மரியாதை இருக்கிறது. என் சொந்த ஊரில், என் பெயர் போடாமல் கூட்டம் நடத்தினர்.

'கட்சி உறுப்பினராக கூட இல்லாதவர்கள் பதவிக்கு வந்துள்ளனர். அவர்கள் எப்படி பதவி வாங்கினர் என்பதை, நான் சொல்ல விரும்பவில்லை.

'முதன்மை செயலருக்கு, மாவட்ட செயலர் மரியாதை தர வேண்டும். மாவட்ட செயலருக்கு, ஒன்றிய செயலர் மரியாதை தர வேண்டும். சில புல்லுருவிகள் செய்கிற செயல் வேதனை தருகிறது' என வைரமணி பேசினார்.

அவரது இந்த பேச்சு, கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமைச்சர் நேருவின் மகனுக்காக, தன் பதவி பறிக்கப்படும் என்பதை முன்கூட்டியே வைரமணி அறிந்து, இப்படி பேசினாரா என தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us