தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/நேபாள பேரிடர்:  தமிழகத்தை சேர்ந்த 100 பேர் மாயம்

நேபாள பேரிடர்:  தமிழகத்தை சேர்ந்த 100 பேர் மாயம்

நேபாள பேரிடர்:  தமிழகத்தை சேர்ந்த 100 பேர் மாயம்

4


ADDED : ஆக 31, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : ஆக 31, 2026 05:43 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நேபாள நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய, தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர, முதல்வர் விஜய் உத்தரவின்படி, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் டில்லி சென்றனர்.

அவர்களில், அமைச்சர் தென்னரசு தவிர, மற்றவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி:-

டில்லி தமிழ்நாடு இல்லத்தில், 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு, ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்தன. இந்திய வெளியுறவுத்துறை செயலரை, நேரில் சந்தித்து ஆலோசித்தோம்.

இந்தியா-, நேபாளம் நாடுகள் இணைந்து, மீட்பு பணிகளை செய்கின்றன.

தமிழகத்தில் இருந்து, 319 பேர், பல்வேறு குழுக்களாக, நேபாளம் சென்றுள்ளனர். அவர்களில், 219 பேர் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

அவர்கள் இன்று இரவுக்குள் சென்னை திரும்புவர். அவர்கள் தவிர, மீதமுள்ள, 100 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி வழியே சென்றிருந்த, 57 பேரில், 21 பேர், முதற்கட்டமாக மீட்கப்பட்டு, டில்லி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சென்னை வந்தனர்.

அவர்களுடன் சென்ற, 36 பேரை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

மற்றொரு குழுவாக சென்ற, 150 பேர், சீனா எல்லை வழியாக, காத்மாண்ட் வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு விமானங்களில் வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் குழுவாக சென்ற 39 பேர் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில், 33 பேர், இன்று மாலை கோவை வந்து சேருகின்றனர். ஆறு பேர் இன்று இரவு சென்னை வந்ததடைவர்.

சென்னை குரோம்பேட்டை மகாதேவி யாத்ராவை சேர்ந்த 49 பேர், எங்கிருக்கின்றனர் என்ற தகவல் இல்லை.

ஹெலிகாப்டர் வழியே மீட்பு பணி, மருத்துவ குழு என, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு, அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us