sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை யூகலிப்டஸ் நறுமண எண்ணெயில் மசாஜ்

/

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை யூகலிப்டஸ் நறுமண எண்ணெயில் மசாஜ்

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை யூகலிப்டஸ் நறுமண எண்ணெயில் மசாஜ்

சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய சிகிச்சை யூகலிப்டஸ் நறுமண எண்ணெயில் மசாஜ்

4


UPDATED : ஜூலை 12, 2025 04:30 AM

ADDED : ஜூலை 12, 2025 04:22 AM

Google News

4

UPDATED : ஜூலை 12, 2025 04:30 AM ADDED : ஜூலை 12, 2025 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டைப் - 2 சர்க்கரை நோயாளிகளுக்கு, யூகலிப்டஸ் நறுமண எண்ணெய் வாயிலாக வயிற்றில் மசாஜ் செய்து சிகிச்சை அளித்தால், ரத்த சர்க்கரை அளவு குறையும்' என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

சென்னை அரும்பாக்கம், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் கீர்த்தி, தீபா, மூவேந்தன், நிவேதிதா, மணவாளன் ஆகியோர் மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

பாதிப்பு


அதில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவில் சீரற்ற ரத்த சர்க்கரை அளவால் ஏற்படும் 'டைப் - 2' சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகளவில், 20 வயது முதல் 79 வயது வரை உள்ள 53.7 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பொருத்தவரை, மொத்த மக்கள் தொகையில் 11.4சதவீதம் பேருக்கு டைப் - 2 சர்க்கரை நோயும், 15.3 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாகஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

அதில், 16.4 சதவீத பாதிப்பு, நகர்ப்புற பகுதிகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

அதை தொடர்ந்து உட்கொள்ளும்போது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிப்பு, கை, கால்களில் வீக்கம், ஜீரண மண்டலம், இதயம், கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

அதை கருத்தில் கொண்டு, யூகலிப்டஸ் எண்ணெய் வாயிலாக, டைப் - 2 சர்க்கரை நோயாளிகளுக்கு வயிற்றில் மசாஜ் சிகிச்சை அளிக்கும் ஆய்வை முன்னெடுத்தோம்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்த, 30 வயது முதல் 70 வயதிலான சர்க்கரை நோயாளிகள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பூக்கள், தாவரங்கள், மூலிகைகள், வேர்கள், இலைகளின் சாரத்தை தனியாக பிரித்தெடுத்து, நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதயத் துடிப்பு


அதன்படி தயாரிக்கப்பட்ட யூகலிப்டஸ் எண்ணெய் 4 மி.லி.,யுடன், நல்லெண்ணெய் 50 மி.லி., சேர்த்து, சர்க்கரை நோயாளிகளின் வயிற்றில் 20 நிமிடம் மசாஜ் செய்யப்பட்டது.

அதற்கு முன், அவர்களது ரத்த சர்க்கரை அளவு, இதயத் துடிப்பு, நுரையீரல் செயல் திறன், மனநலன் சார்ந்த நரம்பியல் செயல்பாடுகள் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் பதிவு செய்யப்பட்டன.

சிகிச்சைக்கு பின், மீண்டும் அதே பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றில், ரத்த சர்க்கரை அளவு சராசரியாக 4.7 சதவீதம் குறைந்திருந்தது தெரிய வந்தது. அதேபோல், இதயத் துடிப்பும் சீராக இருப்பதற்கு, இந்த சிகிச்சை உதவுவது கண்டறியப்பட்டது.

பல கட்ட ஆய்வு


இதை தவிர ஆரோக்கியமான மனநிலை மற்றும் சிந்தனை ஆற்றல் மேம்பாட்டுக்கு, யூகலிப்டஸ் நறுமண சிகிச்சை உறுதுணையாக இருப்பதை ஆய்வு முடிவுகள் உறுதி செய்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசாஜை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் என்பது குறித்து, பல கட்ட ஆய்வுக்கு பின் தெரிய வரும்.

ஆய்வு கூறுவது என்ன?

மசாஜ் செய்யும்போது வயிற்றில் உள்ள ரத்தக் குழாய்கள் நெகிழ்ச்சி அடைவதால், ரத்த ஓட்டம் சீராகி, இன்சுலின் சுரப்பு சமன் அடைகிறது. நரம்புகள் வலுவடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலின் வளர்சிதை மாற்றமும் தேவைக்கு ஏற்ப நடக்கிறது.யூகலிப்டஸ் தைலத்தில் உள்ள 'யூகலிப்டஸ் க்ளோடிலஸ்' மற்றும் பிற ரசாயனங்கள், நீரிழிவு நோய் எதிர்ப்பு திறனைஅதிகரிக்கின்றன. எனவே, இந்த தைலத்தின் உதவியால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும் என, முதல் கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.








      Dinamalar
      Follow us