'கழக நிர்வாகிகள்' பங்கேற்பாம்.. அரசு செய்திக்குறிப்பில் பகீர்
'கழக நிர்வாகிகள்' பங்கேற்பாம்.. அரசு செய்திக்குறிப்பில் பகீர்
UPDATED : மே 28, 2025 02:16 AM
ADDED : மே 28, 2025 02:12 AM

தர்மபுரி : தர்மபுரியில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், அமைச்சர் வேலு பங்கேற்றார். முன்னதாக, காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், சாலையோர கடையில் டீ குடித்தார்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட பி.ஆர்.ஓ., லோகநாதன், படத்துடன் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'அமைச்சர் வேலு, தர்மபுரி மாவட்டத்தில் நடைப்பயிற்சியின் போது, சாலையோர கடையில் பொதுமக்களுடன் டீ குடித்தார். அவருடன் தர்மபுரி எம்.பி., மணி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்' என குறிப்பிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு அதிகாரியாக இருக்கும் ஒருவர், 'கழக நிர்வாகிகள்' என குறிப்பிட்டு செய்தி குறிப்பு வெளியிட்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை, எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.