தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' திட்டம்: உயர் கல்வி பாதிக்கும் அபாயம்

பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' திட்டம்: உயர் கல்வி பாதிக்கும் அபாயம்

பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' திட்டம்: உயர் கல்வி பாதிக்கும் அபாயம்


UPDATED : ஏப் 12, 2015 12:57 AM

ADDED : ஏப் 12, 2015 12:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2015 12:57 AM ADDED : ஏப் 12, 2015 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசுப் பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவ, மாணவியரை, 'ஆல் பாஸ்' என்ற நேரடி தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதனால், அடுத்த வகுப்புக்கான புத்தக வினியோகம் துவங்கி உள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' முறையில் தேர்ச்சி செய்யப்படுகின்றனர். ஆனால், ஒன்பதாம் வகுப்பு முதல், ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டே தேர்ச்சி பெற முடியும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் தனியே தேர்வு எழுதி தான் தேர்ச்சி பெற முடியும். இதேபோல், பிளஸ் 1 தேர்வில் உரிய மதிப்பெண்

@nextcolumn@ பெறாவிட்டால், தேர்ச்சி செய்யப்படுவதில்லை. ஆனால், இந்த ஆண்டு, மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிப்பு; மாணவர்களை பெயிலாக்கினால், அவர்கள் மீண்டும், ஒன்பதாவது, பிளஸ் 1 படிப்பதால் ஏற்படும் கூடுதல் செலவைக் கட்டுப்படுத்த, ' ஆல் பாஸ்' முறையில், நேரடியாகத் தேர்ச்சி செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் வாய்மொழி உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வு முடியும் முன், பள்ளிகளில் பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக, சென்னையில், முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா உத்தரவின் பேரில், மாநில மகளிர் பள்ளியில்,

@nextcolumn@ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு புத்தகங்கள்; பிளஸ் 1 மாணவர்களுக்கு பிளஸ் 2 புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இந்த நடைமுறை கல்வித்தரத்தை பாதிக்கும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: எட்டாம் வகுப்பு வரை இருப்பதுபோன்று, ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் நேரடித் தேர்ச்சி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் தான், ஆண்டுத் தேர்வு, 'ரிசல்ட்டு'க்காக காத்திருக்காமல் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. எப்படியும் அவர்கள் அனைவரும் 'பாஸ்' செய்யப்படுவர். அவர்கள் நன்றாகப் படித்தால், 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2வில் தேர்ச்சி பெறலாம். இல்லையென்றால், அவர்கள் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெறட்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us