தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: திருமா

 ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: திருமா

 ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: திருமா


ADDED : மே 13, 2026 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''த.வெ.க., ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து, இன்னும் முடிவெடுக்கவில்லை,'' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

த.வெ.க., ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து, எங்கள் வலிமை உணர்ந்து, சூழலுக்கு ஏற்ப வேண்டாம் என்ற முடிவை எடுத்தோம். இன்னமும் கூட, முன்னணி நிர்வாகிகள் ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நான் இறுதி முடிவை எடுக்கவில்லை.

தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டே, ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக, ஆதரவு அளித்துள்ளோம். அமைச்சரவையில் இடம் பெற்றால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பொருள். அதனால், முடிவெடுக்க தாமதமாகிறது.

என்னை முதல்வராக்க நடந்த முயற்சியை, காங்கிரஸ் முறியடித்து விட்டதா என்று தெரியாது. என்னை முதல்வராக்கும் முயற்சி நடந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை.

தமிழகத்தில், தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர் முதல்வராகும் அளவுக்கு, தமிழ் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மை. இந்தியாவில், உத்தர பிரதேசம், ஆந்திரா, மஹாராஷ்டிரா, பீஹார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், தலித்துகள் முதல்வராகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்னும் ஒரு நுாறு ஆண்டானாலும், அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பழனிசாமியையும் சந்தியுங்கள் முதல்வருக்கு சிபாரிசு சென்னை வேளச்சேரியில் உள்ள வி.சி.க., தலைவர் திருமாவளவனை, நேற்று அவரது இல்லத்தில், முதல்வர் விஜய் சந்தித்தார். அவருக்கு, அரசியலமைப்பு முகப்புரையை, திருமாவளவன் வழங்கினார். பின், திருமாவளவன் அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில், விஜய் வெற்றி பெற வேண்டும். ஸ்டாலின், உதயநிதி போன்ற அரசியல் கட்சி தலைவர்களை விஜய் சந்தித்து வருவது புதிய வரலாறு. அ.தி.மு.க., தனித்தனி குழுவாக செயல்பட்டு வந்தாலும், தற்போது வரை அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பழனிசாமி தான்; அவரையும் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தோம்; சந்திப்பதாக விஜய் கூறினார். இந்த புதிய அணுகுமுறை, அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி. பழனிசாமி தலைமையில் இருக்கும் அணியில் தான், அ.தி.மு.க., கொறடாவும் இருக்கிறார். கொறடாவின் உத்தரவுக்கு எதிராக ஓட்டளித்தால், அவர்களது ஓட்டு செல்லுமா, பதவி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தனித்து இயங்கினால், அவர்களுக்கான அங்கீகாரம் சபாநாயகரால் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட், த.வெ.க., நிர்வாகியாக இருக்கிறார். அவர் ஜோதிடர் என்பதை விட, அக்கட்சியின் நிர்வாகி என்பதால், அரசு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us