தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ 5 ஆண்டுகள் அல்ல; நுாறு ஆண்டு சவால்கள் மேற்கு வங்கத்தில் சாதிக்குமா பா.ஜ.,?

 5 ஆண்டுகள் அல்ல; நுாறு ஆண்டு சவால்கள் மேற்கு வங்கத்தில் சாதிக்குமா பா.ஜ.,?

 5 ஆண்டுகள் அல்ல; நுாறு ஆண்டு சவால்கள் மேற்கு வங்கத்தில் சாதிக்குமா பா.ஜ.,?


ADDED : மே 10, 2026 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராகவன் எஸ்.ராவ்


மேற்கு வங்கத்தில் நீண்ட போராட்டத்துக்கு பின், பா.ஜ., ஆட்சி மலர்ந்து இருக்கிறது. பதவியேற்க போகும் புதிய அரசு முன் இருக்கும் உண்மையான சவால் என்ன தெரியுமா?

ஆங்கிலேயர்கள், அதன்பின் நேரு ஆட்சி, தொடர்ந்து வந்த கம்யூனிச மற்றும் திரிணமுல் காங்., ஆட்சியால் நுாற்றாண்டுகளுக்கு மேலாக வங்க மக்கள் தங்கள் உண்மையான மண்ணின் நாகரிகத்தையே மறந்து விட்டனர். உடைத்து சொல்வதெனில், மறக்கடிக்கப்பட வைத்தனர் என்பதே நிதர்சனம்.

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து திரிணமுல் காலம் வரை புரையோடி போன சித்தாந்தங்களை எல்லாம் மக்கள் மனதில் இருந்து அகற்றிவிட்டு, அவர்களை பழைய வங்க மக்களாக மாற்றுவது தான் பா.ஜ.,வின் முன் இருக்கும் இமாலய சவால்.

இயற்பியல் பண்பு மேற்கு வங்கத்தின் நாகரிகம் என்னவென்பது கடந்த இரு தலைமுறைகளாகவே இந்தியர்களுக்கு சொல்லித் தரப்படவில்லை. 1820 முதல் 1941 வரையிலான காலக்கட்டத்தில், நாட்டில் பல பகுதிகள் காலனி ஆதிக்கத்தில் கட்டுண்டு கிடந்தன.

ஆனால், மேற்கு வங்கம், அந்த சங்கடங்களை எல்லாம் கடந்து இலக்கியத்திற்கான ஐரோப்பியர் அல்லாத முதல் நோபல் பரிசு பெற்றவரை உருவாக்கியது.

நவீன வான் இயற்பி யல், இன்றும் நட்சத்திரங்களின் வெப்பநிலையைக் கணக்கிடப் பயன்படுத்தும் சமன்பாடு மேற்கு வங்கத்தில் இருந்தே தோன்றியது. மேக்நாத் சாஹா உருவாக்கிய இந்த சமன்பாடு விண்மீன்களின் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளை புரிந்துகொள்ள இன்றும் அடிப்படையாக உள்ளது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து, சத்யேந்திரநாத் போஸ் உருவாக்கிய, 'போஸ் - ஐன்ஸ்டீன்' புள்ளிவிபரம் பிரபஞ்சத்தில் உள்ள அடிப்படைத் துகள்களின் ஒரு வகையை விளக்குகிறது.

மார்கோனி தன் ஒயர்லெஸ் கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, கொல்கட்டாவில் உள்ள டவுன் ஹாலில், மில்லி மீட்டர் அலைவரிசை மூலம் கம்பியல்லா தொலைத்தொடர்பை ஜே.சி.போஸ் செய்து காட்டினார்.

இன்றைய 5ஜி தொழில்நுட்பம் மற்றும் 'வை-பை' ஆகியவற்றின் தொடக்கப் புள்ளியாக இது இருந்து வருகிறது. அறிவியல் மட்டுமின்றி, ஆன்மிகத்திலும் மேற்கு வங்கத்தின் நாகரிகம் உயர்ந்த நிலையில் இருந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், அவரது சீடரான விவேகானந்தர், அரவிந்தர் என 19ம் நுாற்றாண்டில் ஹிந்து மதத்திற்கு தலைசிறந்த மகான்களை அளித்து நம்பிக்கை கொடுத்தது.

தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நாடி, நரம்பெல்லாம் தேசப்பற்றை முறுக்கேற வைத்த, 'வந்தே மாதரம்', ஜனகன மண தேசிய கீதம் ஆகியவை இங்கு இருந்து தான் உருவானது.

சிந்தனை திறன் இவை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் பொருளாதாரத்திற்கும் மேற்கு வங்கம் முக்கிய நிலமாக திகழ்ந்தது. சொல்லப்போனால், பிரிட்டிஷ் இந்தியாவின் கடல் கடந்த வர்த்தகத்திற்கு பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பு மேற்கு வங்கத்தில் இருந்தே சென்றது.

லண்டனுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷாரின் இரண்டாவது தலைநகரமாகவே கொல்கட்டா இயங்கியது என்றால், அங்கு தொழில் வளம் எப்படி கொடிக்கட்டி பறந்து இருக்கும் என ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஆனால், 1911 முதல் 2026 வரை மேற்கு வங்கம் பல்துறைகளில் சரிவை சந்தித்து இருக்கிறது. இது இயற்கையானது அல்ல. பிரிட்டிஷ் அரசு, நேருவின் ஆட்சி, கம்யூனிச மற்றும் திரிணமுல் கட்சிகளால் படிப்படியாக அதன் பெருமை துடைத்தெறியப்பட்டன.

அதற்கு, 1911ல் பிரிட்டிஷார் தங்களது தலைநகரை கொல்கட்டாவில் இருந்து டில்லிக்கு மாற்றியது தான் ஆரம்ப புள்ளியாக மாறியது.

சுதந்திரத்திற்கு பின், நேரு கொண்டு வந்த சோஷலிஸம், பொருளாதார கொள்கைகள், மேற்கு வங்கத்தின் தொழில் வளத்தை மற்ற மாநிலங்களுக்கு மிக மலிவாக கடத்திச் சென்றன.

அதன்பின், இடதுசாரிகள் ஆட்சி காலத்தில் 'தொழிலாளர் புரட்சி' என்ற பெயரில், தொழிற்சாலைகள் வெளியேற்றப்பட்டன. மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியில், அதை ஒரு அரசியல் வன்முறை மற்றும் ஊழல் கலாசாரமாக மாற்றியது.

மேற்கு வங்கம் ஒரு காலத்தில், நாட்டின் சிந்தனை தொழிற்சாலையாக இருந்தது. ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் சிந்தனை திறன் கொண்ட வங்க இளைஞர்கள் அனைவரும் வேலை தேடி பெங்களூரு, மும்பை அல்லது அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

கலாசார மீட்டெடுப்பு மேற்கு வங்கத்தின் இந்த பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுப்பது தான் பா.ஜ., முன் இருக்கும் மிகப்பெரிய சவால்கள்.

இதில் இன்னொரு விஷயத்திலும் பா.ஜ., அதிக கவனம் செலுத்த வேண்டும். அது கலாசார மீட்டெடுப்பு. விஸ்வபாரதி, பேளூர் மடம், போஸ் இன்ஸ்டிடியூட் ஆகிய கல்வி நிறுவனங்களை கலாசாரத்தை ஊட்டும் கேந்திரங்களாக முன்னிறுத்த வேண்டும்.

திரிணமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மேற்கு வங்கத்தின் தனித்துவத்தை ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். பா.ஜ., அந்தப் பிம்பத்தை உடைக்க வேண்டும்.

இந்த மாற்றத்தை ஒரு ஐந்து ஆண்டு கால ஆட்சியில் முழுமையாகச் சாதிக்க முடியாது; ஆனால் அதற்கான விதையை 2026 வெற்றி விதைத்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us