தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கோவில்களில் சிலர் மட்டுமே டெண்டர் எடுப்பதற்கு தடை விதிகளை மாற்ற உத்தரவு

கோவில்களில் சிலர் மட்டுமே டெண்டர் எடுப்பதற்கு தடை விதிகளை மாற்ற உத்தரவு

கோவில்களில் சிலர் மட்டுமே டெண்டர் எடுப்பதற்கு தடை விதிகளை மாற்ற உத்தரவு

9


ADDED : ஜூன் 27, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 04:59 AM

9


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: 'அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில்களில், சிலர் மட்டுமே தொடர்ந்து டெண்டர் எடுப்பதை தவிர்க்க, விதிமுறைகளை திருத்தியமைக்க வேண்டும். பிரசாதம் வழங்கப்படாத கோவில்களில் நிர்வாகமே தயாரித்து பிரசாதம் வழங்க வேண்டும். ஒருகால பூஜை நடக்கும் கோவில்களில், இனி மூன்றுகால பூஜை நடத்த வேண்டும்' என, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அறநிலைய துறையின் கீழ், 44,000 கோவில்கள் உள்ளன. அதிக வருவாய் தரும் கோவில்கள், அடுத்த நிலையில் உள்ள கோவில்களில் பூ, பழம் விற்பனை, காலணி பாதுகாத்தல், பார்க்கிங் போன்றவற்றிக்கு கோவில் நிர்வாகம் டெண்டர் விட்டு வருவாய் ஈட்டுகிறது.

இதில், அரசியல் பின்னணியுடன் சிலர் மட்டுமே காலம்காலமாக டெண்டர் எடுத்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டணங்களையும் உயர்த்தி வசூலிக்கின்றனர். இதுகுறித்து, அமைச்சர் ரமேஷுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், சிலர் மட்டுமே டெண்டர் எடுப்பதை தவிர்க்க, அதற்கான விதிமுறைகளில் சில திருத்தங்களை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். வழக்கமாக, ஜூலை 1 முதல் ஜூன் வரை ஓராண்டுக்கு டெண்டர் விடப்படும். அமைச்சர் உத்தரவால், 2026 - 27ம் ஆண்டிற்கான டெண்டர் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் டெண்டர் விடப்பட உள்ளது. இதன் மூலம் தகுதியானவர்கள் அனைவரும் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இனி அனைத்து கோவில்களிலும் பிரசாதம் வழங்க, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோவில் நிர்வாகமே தயாரித்து இதை வழங்க உள்ளது.

உதாரணமாக, மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள உபகோவில்களில், மீனாட்சி கோவிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் இனி கிடைக்கும். அதுபோல், ஒருவேளை மட்டுமே பூஜை நடக்கும் கோவில்களை கண்டறிந்து, இனி மூன்று வேளையும் பூஜை நடக்க ஏற்பாடு செய்யுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us