sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 சட்டசபை தேர்தல் செலவு குறித்து வாய் திறக்க மறுக்கும் பழனிசாமி; அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் குற்றச்சாட்டு

/

 சட்டசபை தேர்தல் செலவு குறித்து வாய் திறக்க மறுக்கும் பழனிசாமி; அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் குற்றச்சாட்டு

 சட்டசபை தேர்தல் செலவு குறித்து வாய் திறக்க மறுக்கும் பழனிசாமி; அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் குற்றச்சாட்டு

 சட்டசபை தேர்தல் செலவு குறித்து வாய் திறக்க மறுக்கும் பழனிசாமி; அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் குற்றச்சாட்டு

1


ADDED : மார் 07, 2026 06:01 AM

Google News

1

ADDED : மார் 07, 2026 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தல் செலவு குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மவுனம் காப்பதாக அக்கட்சி மாவட்ட செயலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இது குறித்து, மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: தேர்தலுக்கு தேர்தல், அனைத்து செலவுகளும் கூடிக் கொண்டே செல்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவாகும்.

வே ட்பாளர் செலவு போல, ஒவ்வொரு மாவட்ட செயலர்களுக்கும் தனி செலவுகள் உள்ளன.

தி.மு.க.,வை பொறுத்தவரை, அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள் வாயிலாக, எல்லா தொகுதிகளுக்கும் நிதி சென்று விட்டது.

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கும், தி.மு.க., தான் செலவு செய்கிறது. ஆனால், அ.தி.மு.க.,வில் அது குறித்து பழனிசாமி இன்னும் பேச்சே எடுக்கவில்லை.

கட்சி தலைமை அலுவலகத்தில், கடந்த 4ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன் வீட்டுக் கு, மா.செ.,க்களை பழனிசாமி வரவழைத்தார். அவர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆனால், அங்கும் பூத் கமிட்டி, துண்டு பிரசுரம், வேட்பாளர் தேர்வு பற்றி மட்டுமே பழனிசாமி பேசினார். தேர்தல் செலவு குறித்து மா.செ.,க்கள் சிலர் அவரிடம் கேட்டபோது, 'அதையெல்லாம் நீங்களும் வேட்பாளரும் பேசி கொள்ளுங்கள்' என கைவிரித்து விட்டார்.

ஏற்கன வே, கூட்டணி அமைக்கவும், தேர்தல் செலவிற்கும், டில்லி முக்கியஸ்தர்கள் வழியாக பெரும் தொகை அ.தி.மு.க.,வுக்கு வந்ததாக தகவல் உள்ளது.

அந்த தொகை என்ன ஆனது என தெரியவில் லை. அது குறித்து, சமீபத்தில் டில்லி சென்ற பழனிசாமியிடம், பா.ஜ., மேலிடம் விசாரித்துள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க.,வின் தேர்தல் செலவு குறித்து, மா.செ.,க்களிடம் கூ ட, பழனிசாமி பேசாமல் இருப்பது மர்மமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us