கையெழுத்திடும் உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பன்னீர் மனு
கையெழுத்திடும் உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பன்னீர் மனு
ADDED : மார் 19, 2024 04:12 AM

அ.தி.மு.க., வேட்பாளரின் வேட்பு மனுவில், வேட்பாளரையும், சின்னத்தையும் அங்கீகரித்து, கையெழுத்து போடுவதற்கு தனக்கு அதிகாரம் அளிக்கும்படி, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில், தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது
ஆணையத்தில் பன்னீர்செல்வம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு:
அ.தி.மு.க.,வுக்கான உரிமை குறித்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்களின் வேட்புமனுவில் வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்து போடுவதற்கான அதிகாரத்தை, எனக்கு உறுதிப்படுத்தி தர வேண்டும்.
அது முடியாதபட்சத்தில் வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் பொதுச்சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும். அந்த அடிப்படையில், அ.தி.மு.க., - ஓ.பி.எஸ்., அணி என்ற பெயரில், லோக்சபா தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

