தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தானியங்கி இயந்திரம் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்ய திட்டம்!

தானியங்கி இயந்திரம் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்ய திட்டம்!

தானியங்கி இயந்திரம் வாயிலாக ஆவின் பால் விற்பனை செய்ய திட்டம்!

13


ADDED : ஜூலை 15, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 06:12 AM

13


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்வதற்கு பதிலாக, தானியங்கி இயந்திரம் வழியே, பால் விற்பனை செய்யும் திட்டம், சோதனை அடிப்படையில், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் செயல்படுத்தப்பட உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, பால் விநியோகிக்க, பிளாஸ்டிக் பாக்கெட்களுக்கு பதிலாக, மாற்று வழியை கண்டறிய உத்தரவிட்டது.

அதன்படி, ஆவின் நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை: ஆவின் பால் விநியோகத்துக்கு, மீண்டும் தானியங்கி விற்பனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை அடிப்படையில், கொடைக்கானல், ஊட்டி நகரங்களில், மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில், அந்த இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த, தனியார் நிறுவனத்திடம் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.

இயந்திரங்களை நிறுவ, உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இயந்திரங்களை வைத்த பின், அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு, பாக்கெட்டுகளில் பால் வினியோகிக்க கூடாது என, மொத்த விற்பனையாளர்கள், ஏஜெண்டுகள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. இயந்திரங்களை அமைத்த பின், பாக்கெட்டுகளில் பால் விற்பனை நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலப்படத்துக்கு வாய்ப்பு?
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், 'தானியங்கி இயந்திரம் வாயிலாக, பால் விற்பனை முறை, கடந்த 1970ல் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கலப்பட புகாரை அடுத்து, இத்தகைய நடைமுறை, 2014ம் ஆண்டு முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது. எனவே, மீண்டும் இத்தகைய நடைமுறையை அமல்படுத்தும்போது, பாலில் முற்றிலும் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, நீதிமன்றத்திடம் வலியுறுத்தினர்.



 நஷ்டத்தில் இயங்குவது ஏன்? அதிகாரிகளிடம் முதல்வர் கேள்வி


பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், அமைச்சர்கள் மரிய வில்சன், கமலி, விஜயலட்சுமி, தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது குறித்து, பால்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் வாயிலாக தினமும் எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது; விற்பனை செய்யப்படுகிறது; எதனால் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என, முதல்வர் கேட்டதற்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பால் விற்பனை அதிகளவில் நடக்கும்போது, ஆவினுக்கு ஏன் நஷ்டம் ஏற்படுகிறது; அதனை சரி செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் முதல்வர் கேட்டறிந்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us