தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/முன்னாள் அமைச்சர் வேலுவிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் அமைச்சர் வேலுவிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் அமைச்சர் வேலுவிடம் போலீசார் 5 மணி நேரம் விசாரணை

9


ADDED : ஜூலை 16, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 06:22 AM

9


9
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு நேற்று காலை, தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜாரானார். அவரிடம், ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கரூரில், சாலையே போடாத நிறுவனத்திற்கு, 3.23 கோடி ரூபாய் விடுவித்து மோசடி நடந்து இருப்பதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உட்பட, 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, சென்னை ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று காலை, வேலு ஆஜரானார். அவரிடம், ஐந்து மணி நேரம் விசாரணை நடந்தது.



அதன்பின், வேலு கூறியதாவது: லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், என்னிடம் பல கேள்விகள் கேட்டனர். என் மனதில் பட்டதை தெரிவித்துள்ளேன்.

குறிப்பாக, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, நுாறு சதவீதம் உண்மையை சொன்னேன். நான் தெரிவித்த பதில்களை கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டனர். இது வழக்கமான நடைமுறை தான்.

விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் தயாராக இருப்பதாக, அவர்களிடம் தெரிவித்துள்ளேன். என் மடியிலும் கனமில்லை; வழியிலும் பயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சமீபத்தில் அவர் சிங்கப்பூர் சென்ற நிலையில், வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, 'லுக் - அவுட்' நோட்டீஸ் பிறப்பித்தது. இதை எதிர்த்து வேலு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'லுக் - அவுட்' நோடீசுக்கு நிபந்தனையுடன் இடைக்கால தடை விதித்தது. உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது.
வேலு, சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்பி விட்டார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தலாம். தற்போது இதில் தலையிடத் முடியாது' என கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
எ.வ.வேலு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு தொடக்கமாகவே முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்துள்ளது,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'ஆளுங்கட்சியாக இருந்தபோது நீங்களும், இதைத்தானே செய்திருப்பீர்கள்' என, தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us