யார் யாருக்கு ஆயிரம் ரூபாய்: தெளிவுப்படுத்துமா அரசு?
யார் யாருக்கு ஆயிரம் ரூபாய்: தெளிவுப்படுத்துமா அரசு?
UPDATED : ஜன 06, 2024 07:36 AM
ADDED : ஜன 06, 2024 12:40 AM

திருப்பூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒருகிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
முந்தைய ஆண்டுகளில், அரிசி கார்டுதாரர், போலீஸ் கார்டு, இலங்கை அகதிகள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரொக்கம் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டுதாரர், பொருளில்லா கார்டுதாரர்களுக்கு மட்டும் பரிசு தொகுப்பு வழங்கப்படாது.
இந்தாண்டு அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும். அதிலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோராக இருந்தால், ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 7 லட்சத்து 97 ஆயிரத்து 766 அரிசி கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம்பெறுகின்றனர். அரசின் புதிய நிபந்தனையால், ஆயிரம் ரூபாய் ரொக்கம் தங்களுக்கு கிடைக்குமா; கிடைக்காதா என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.