த.வெ.க.,வின் ஓட்டு சதவீதம்?: பிரசாந்த் கிஷோர் அறிக்கை
த.வெ.க.,வின் ஓட்டு சதவீதம்?: பிரசாந்த் கிஷோர் அறிக்கை
ADDED : பிப் 12, 2025 05:38 AM

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணியை, பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் செய்து வருகிறார். அவரின், 'ஐபேக்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் கட்சிக்கு, அவர், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுத்துத் தருவது வழக்கம்.
சென்னையில் நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜயை, பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பில், 2026 சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துத் தரும் பணியை, பிரசாந்த் கிஷோர் ஒப்படைப்பது குறித்து பேசப்பட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றும் இரண்டாம் கட்ட பேச்சு நடந்தது. பனையூரில் நடந்த சந்திப்பில், த.வெ.க., பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். பின், ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு வந்த பிரஷாந்த் கிஷோர், விஜய்கான அரசியல் வியூகம் குறித்து சில மணி நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

