தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தெலுங்கானா பா.ஜ., தலைவர்கள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

தெலுங்கானா பா.ஜ., தலைவர்கள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

தெலுங்கானா பா.ஜ., தலைவர்கள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்


UPDATED : டிச 20, 2025 05:44 AM

ADDED : டிச 20, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2025 05:44 AM ADDED : டிச 20, 2025 02:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெலுங்கானாவில், பா.ஜ., வின் செயலற்ற தன்மை மற்றும் மாநில தலைவர்களிடையே உட்கட்சி பூசல் அதிகரித்து வருவதால், அதிருப்தி அடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களை நேரில் அழைத் து கடுமையாக கடிந்து கொண்டதாக தகவல் வெ ளியாகி உள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி பிரதான எதிர்க்கட்சி. மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ., உள்ளது.



கவலை

ஆந்திராவில் இருந்து பிரிந்து, 2014ல் உருவான தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது, பா.ஜ., மேலிடத்தின் நீண்ட கால கனவு.

அதன் ஒரு பகுதியாகவே அம்மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் ஆகியோரை மத்திய அமைச்சர்களாக்கினார் பிரதமர் மோடி.

தெலுங்கானாவில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு அ வர்கள் பாடுபடுவர் என, அவர் நினைத்தார். ஆனால் அவர்களோ, கட்சியில் தங்களது செல்வாக்கை நிரூபிப்பதில் கவனம் செ லுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி - பண்டி சஞ்சய் குமார் இடையே நிலவும் உட்கட்சி பூசலால், பா.ஜ., தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.

பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு எதிராக மென்மையான போக்கை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கடைப்பிடிப்பதாகவும், அக்கட்சியுடன் கூட்டணியை அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எதிராக, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. தெலுங்கானா பா.ஜ., தலைவர்களிடையே அதிகார மோதல் நீடிப்பது, அக்கட்சியை ஊசலாட வைத்துள்ளது.

கடந்த, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு இணையாக, 35 சதவீத ஓட்டுகளை பெற்று, எட்டு தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றியது. இதற்கு, பிரதமர் மோடியே காரணம்.

சமீபத்தில் நடந்து முடிந்த, ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் 8.8 சதவீத ஓட்டுகளை பா.ஜ., பெற்றது. இது, பா.ஜ., மேலிட தலைவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

டில்லியில் சமீபத்தில், தென் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ., தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். இதில், தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, தெலுங்கானா பா.ஜ., தலைவர்க ளை பிரதமர் மோடி கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

'தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.,வின் நீண்ட கால கனவு. இதை நிறைவேற்ற, அனைத்து நிர்வாகிகளும் விருப்பு வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். உட்கட்சி பூசலை கைவிட்டு, கட்சியின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.



எச்சரிக்கை

'தெலுங்கானாவைச் சேர்ந்த இருவர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். எனினும், அம் மாநிலத்தில் பா.ஜ.,வின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

'கட்சி யின் செயல்பாட்டை நானே நேரடியாக கண்காணிப்பேன். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால், கட்சி நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி விடுவேன்' என, பிரதமர் மோடி கோபத்து டன் எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us