தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ராகுலைப் போல் கீழ்த்தரமான விமர்சனம் கூடாது: மோடி உத்தரவு!

ராகுலைப் போல் கீழ்த்தரமான விமர்சனம் கூடாது: மோடி உத்தரவு!

ராகுலைப் போல் கீழ்த்தரமான விமர்சனம் கூடாது: மோடி உத்தரவு!

4


UPDATED : அக் 11, 2026 04:53 AM

ADDED : அக் 11, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 04:53 AM ADDED : அக் 11, 2026 02:49 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'வரும், 2029ல் ராகுல் தான் பிரதமர்' என, காங்கிரசார் கூறி வருகின்றனர். 'பக்கத்து நாடான, நேபாளத்தில் எப்படி ஒரு, 'ராப்' பாடகரை அங்குள்ள இளைஞர்கள், பிரதமர் பதவியில் அமர வைத்தனரோ, அப்படி இங்கும் நடக்கும். மோடி காலம் முடிந்துவிட்டது. கம்புகளால் மோடியை அடித்து வெளியேற்றுவோம்' என, கண்டபடி பேசி வருகின்றனர். சமீபத்தில், ராகுல் தான் நடத்திய போராட்டங்களில், பிரதமர் மோடியை மரியாதை குறைவாகவும், ஆபாசமாகவும் பேசினார். தொடர்ந்து, பேசியும் வருகிறார்.

இந்த பேச்சுகளையும், ராகுலின் நடவடிக்கைகளையும், பா.ஜ.,வினர் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், அதற்கு பதிலடியும் அளித்து வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் மோடி, தன் கட்சியினருக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

'என்னை பற்றி ராகுல் எவ்வளவு கேவலமாக பேசினாலும் பரவாயில்லை. அதற்கு எதிராக நாமும் கீழ்தரமாக விமர்சனம் செய்யக் கூடாது. மக்கள் அனைத்தையும் பார்க்கின்றனர். யார் அவர்களுக்கு தேவை என்பதை மக்களே முடிவு செய்வர். நீங்கள் எதுவும் பேச வேண்டாம்' என, மோடி கறாராக சொல்லி விட்டாராம். காங்., மூத்த தலைவர்களுக்கும், ராகுலின் இந்த கீழ்தரமான விமர்சனம் பிடிக்கவில்லையாம். ஆனால், அவரிடம் இதை சொல்ல தயங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us