ADDED : ஜன 27, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில், பாதயாத்திரை மேற்கொண்டுஉள்ளார். 234 சட்டசபை தொகுதிகளுக்கும் செல்லும் திட்டத்தோடு துவங்கிய பாதயாத்திரையை, அடுத்த மாதம் இறுதியில் அண்ணாமலை நிறைவு செய்கிறார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், 300 ஏக்கர் இடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -

