தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ரெய்டில் சிக்கிய சார் - பதிவாளர்களை இடமாற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பு; அமைச்சர்கள் சிபாரிசால் உத்தரவு தாமதம்

ரெய்டில் சிக்கிய சார் - பதிவாளர்களை இடமாற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பு; அமைச்சர்கள் சிபாரிசால் உத்தரவு தாமதம்

ரெய்டில் சிக்கிய சார் - பதிவாளர்களை இடமாற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பு; அமைச்சர்கள் சிபாரிசால் உத்தரவு தாமதம்

6


ADDED : ஆக 26, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : ஆக 26, 2026 05:11 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய, 40 சார் - பதிவாளர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக, பதிவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, பிற துறை அமைச்சர்கள் சிபாரிசால், பிரச்னை ஏற்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், பத்திரப்பதிவு போன்ற பணிகளில் பொது மக்களிடம் லஞ்சம் கேட்கக் கூடாது; பத்திரப்பதிவுக்காக வரும் மக்கள், மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், லஞ்சம் கொடுக்காமல், பத்திரப்பதிவு செய்யும் நிலை உருவானது. அதே சமயம், சில இடங்களில் சார் - பதிவாளர்கள், பொது மக்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, லஞ்ச ஒழிப் புத்துறை, 40க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது, கணக்கில் வராமல் இருந்த, 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், ரெய்டில் சிக்கிய சார் - பதிவாளர்களை, வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இதன்படி, ரெய்டில் சிக்கியசார் - பதிவாளர்கள், உதவியாளர்களை இடமாற்றம் செய்வதற்கான கோப்புகள், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டன.

பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு அடிப்படையில், 40 பேரை இடமாறுதல் செய்வதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருப்போர், பிற துறை அமைச்சர்களிடம் சிபாரிசுக்கு சென்றுள்ளனர்.

சிபாரிசு


இது தொடர்பாக, பிற துறை அமைச்சர்கள் அலுவலகங்களில் இருந்து, பதிவுத்துறைக்கு சிபாரிசு செய்யப்படுவதால், அவர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களில், சிபாரிசு செய்வதை, பிற துறை அமைச்சர்கள் தவிர்த்தால், தவறு செய்வோர் மீது முறையாக நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us